Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அதிமுக கட்சியை அழிக்க துடிக்கும் திமுகவின் கைக்கூலி நாஞ்சில் சம்பத்தே நாவை அடக்கு இல்லையேல் அடக்குவோம். :முன்னாள் வாரியத் தலைவர் இரா.அமிர்தகணேசன் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார் .

கோடான கோடி தொண்டர்களின் விருப்பத்தை சீர்குலைக்கும் திமுகவின் கைக்கூலி நாஞ்சில் சம்பத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.என முன்னாள் தமிழக மீன் வாரிய கழக தலைவரும் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான. இரா.அமிர்த கணேசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்ததாவது
அ.இ.அண்ணா தி.மு. கழகம் இணைய வேண்டும் என்று கோடான கோடி தொண்டர்கள் வேண்டாத தெய்வம் இல்லை. எப்போதும் நம் இயக்கம் இணையும், பிரிந்த சகோதரர்கள் எப்போது ஒன்று சேருவார்கள், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் எப்போது கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தொண்டர்களின் எதிர்பார்ப்பை சீர்குலைக்கும் செயலைச் செய்யும் அரசியல் விபச்சாரி நாஞ்சில் சம்பத்தே,
திமுக, மதிமுக, அதிமுக என காலையில் ஒரு கட்சி, மதியம் ஒரு கட்சி, இரவு ஒரு கட்சி, விடிந்தால் ஒரு கட்சி என கட்சி மாறும் பச்சோந்தியே, தமிழை தன் தவளைவாயால் விற்று பிழைக்கும் பித்தனே, காலையில் வான்கோழி என்கிறாய், மாலையில் மயில் என்று கூறும் மாலைக்கண் நோயாளியே,
கடந்த காலங்களில் இதய தெய்வம் புரட்சித்தலைவரையும், புரட்சித்தலைவி அம்மாவையும் உன் தவளை வாயால் வசை பாடியதை கோடான கோடி தொண்டர்கள் இன்னும் மறக்கவில்லை.
இதய தெய்வம் அம்மா மறைந்தவுடன் திமுக செயல்தலைவரிடம் திமுகவில் சேர கொடுத்த கடிதம் வியாபாரம் ஆகவில்லை என்றதும், வான்கோழி உன் மாலைக் கண்ணிற்கு மயிலானதே ஏன்? யாரிடம் எவ்வளவு விலைக்கு உன் தமிழை விற்றாய்.
அண்ணாதிமுக தலைமைக்காக சாலை மறியல், போராட்டம் போன்றவற்றில் பங்கெடுத்து சிறைச்சென்று, ஒரு நிமிடம் கூட இயக்கத்திற்கு தியாகம் செய்யாத இன்னோவா நாஞ்சில் சம்பத்தே. 
கழகத்தில் இணைந்த அன்றே கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி பெற்று, இன்னோவா கார் பரிசும் பெற்று பல வழிகளில் சுகம் அனுபவித்த நாஞ்சில் சம்பத்தே உன் நாவை அடக்கு.
வான்கோழி ஒருநாளும் மயிலாகாது என வீர வசனம் பேசிய அன்றே  இன்னோவா காரை வேண்டாம் என தலைமைக் கழகத்தில் ஒப்படைத்த நாஞ்சில் சம்பத்தே, மானம் கெட்டுப் போய் மாலையில் இன்னோவா காரை பெற்றது ஏன்? திமுகவில் தன் வியாபாரம் படியவில்லை என்பது தான் காரணமா?.
கழகம் இணைய வேண்டும், கருத்து வேறுபாட்டால் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர வேண்டும். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் இமாலய வெற்றி பெற வேண்டும், பாரத ரத்னா இதய தெய்வம் புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை உலகம் வியக்கம் வண்ணம் கொண்டாட வேண்டும் என்றும் அத்திருநாள் வரும் நாள் எந்நாளோ  என கோடான கோடி தொண்டர்களின் உணர்வுகளை புரியாமல், தனது தவளைவாயால், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் பேட்டி அளிப்பதை நிறுத்து, நாவை அடக்கு என கோடான கோடி தொண்டர்களின் ஒருவனாய் கேட்டுக்கொள்கிறேன்.
கழகம் இரண்டு பட்டாலும், உன்னைப் போல ஒரு தொண்டனும் திமுக-விற்கு விலை போகவில்லை. திமுகவின் கைக்கூலி நாஞ்சில் சம்பத்தே திமுகவிற்கு விலை போன நீ, அண்ணா திமுக தொண்டர்களை யாரிடம் விலைபோனார்கள் என கேள்வி எழுப்ப அருகதை நாஞ்சில் சம்பத்துக்கு கிடையாது.
திமுகவிற்கு விசுவாசமாக செயல்பட்டு, அதிமுக கட்சியை அழிக்க துடிக்கும் நாஞ்சில் சம்பத்தே, தமிழை விற்று பிழைப்பவனே நாவை அடக்கு இல்லையேல் அடக்குவோம். என முன்னாள் தமிழக மீன் வாரிய கழக தலைவரும் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான. இரா.அமிர்த கணேசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்தார்.

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.