Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அரசு அதிகாரிகளுக்கு ஆப்பு! ஊழல்களை விசாரிப்பதற்காக வரும் புதிய சட்டம்! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு வரும் ஆப்பு! தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு வரும் ஆப்பு! தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் என பொது ஊழியர்கள் செய்யும் ஊழல்களை விசாரிப்பதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

லோக் ஆயுக்தா சட்டத்தை சில மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் செயல்படுத்தவில்லை.

இந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டத்தை செயல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா கடந்த ஜூலை மாதம் நிறைவிட்டினர்.

இந்நிலையில், லோக் ஆயுக்தா தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக் ஆயுக்தா அமைக்காதது குறித்து தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும், லோக் ஆயுக்தா அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இன்று விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இதையடுத்து பிற்பகல் மீண்டும் விசாரணை தொடங்கியபோது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிப்ரவரி மாதத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து தமிழக அரசுக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.