Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ஆபாசம்..!ஆபாசம்..! 53 வயசில் இவர் செய்த வேலையை பாருங்க.. செஞ்சதெல்லாம் மகா மட்டம்

மாட்ரிட்: இந்த நபருக்கு 53 வயசாகுது.. ஆனா பண்ணி வெச்சிருக்கிற வேலையெல்லாம் மகா மட்டமான வேலைகளே! கொலம்பியாவை சேர்ந்தவர் இந்த நபர். இளம் பெண்களை திருட்டுத்தனமாக வளைத்து வளைத்து வீடியோ எடுத்திருக்கிறார்.

53 year old Man arrested for upskirting over 500 women posting Videos

தன்னுடைய பைக்குள் செல்போனை மறைத்து வைத்த கொண்டே இந்த ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளார். ஒன்னுல்ல, ரெண்டு இல்லை.. 550-க்கும் மேற்பட்ட பெண்களை இப்படி கன்னாபின்னாவென்று வீடியோ எடுத்துள்ளார். இதைவிட கொடுமை, 283 வீடியோக்களை ஆபாச இணையதளத்திலும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்தும் உள்ளனர். ஒரு வருடமாகவே இவருக்கு இதேதான் பொழப்பாக இருந்திருக்கிறது. தினமும் பெண்கள் பின்னாடியே போக வேண்டியது, அசந்த நேரத்தில் ஆபாசமாக வீடியோ எடுப்பது.. என்று 550 பெண்களை இப்படி அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்துள்ளார்.

இதற்கு இவர் தேர்ந்தெடுக்கும் இடம், மெட்ரோ ரெயில்வே ஸ்டேஷன், சூப்பர் மார்க்கெட் போன்றவைதான். இங்குதான் நிறைய பெண்கள் வருவார்கள் என்பதால் இங்கு போய் உட்கார்ந்து கொள்வார் இந்த நபர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் இவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். 2 நாளைக்கு முன்னாடியும் இப்படிதான் மெட்ரோ ரெயிலில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து கொண்டிருந்தார் இவர்.

அப்படியோ லபக்கென போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்துவிட்டனர். அவரது வீட்டிற்கு சென்று பார்த்தால்.. அவ்வளவும் ஆபாச வீடியோக்கள் நிறைந்திருந்தது. சோதனையின் முடிவில் நூற்றுக்கணக்கான வீடியோக்கள், லேப்டாப், ஹார்ட் டிரைவ்கள் என அனைத்தையும் கைப்பற்றினர் போலீசார். இந்த மனுஷன் இதே பொழப்பாவே அலைஞ்சிட்டு இருந்திருக்கார் போல! ஸ்பெயினை பொறுத்தவரை, பெண்களை ஆபாசமாக வீடியோ எடுப்பது பாலியல் துன்புறுத்தல் ஆகும். அதனால் எப்படியும் இவருக்கு நிறைய வருஷம் தண்டனை காத்திருக்கிறது!

l

Check Also

பேப்பர் எங்கடா.. ஷூ காலால் மிதித்த காக்கி சட்டைகள்.. அடிக்காதீங்க சார்.. வலிக்குது.. ஷாக் வீடியோ

லக்னோ: இளைஞர் ஒருவரை 2 போலீசார்கள் எகிறி எகிறி காலால் எட்டி உதைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்தியாவில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.