Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

இதமட்டும் தெரியாம கூட பண்ணிடாதீங்க… அப்பறம் பாகிஸ்தான் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது… டிராவிட் அட்வைஸ் !!

சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி போட்டியில்  பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் இந்திய அணிக்கு டிராவிட் தனது அனுபவங்களை வைத்து அறிவுரை வழங்கியுள்ளார்.

மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி வரும் 18ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில்  பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட் “இதுவரை இந்திய அணி என்ன செய்து கொண்டுள்ளதோ, அதையே இறுதி போட்டியிலும் தொடர்ந்தாலே போதும், வீணாக அணியை மாற்ற வேண்டிய அவசியமில்லை, அதனால், கோஹ்லி இந்த விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இறுதிபோட்டி  என்ற பதட்டத்தை அதிகரித்துக்கொள்ள கூடாது. ’ என்று தெரிவித்துள்ளார்.

Check Also

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு   சென்னை, வங்கக்கடலில் உருவான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.