Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

இன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.

கிழக்கிலிருந்து வீசக்கூடிய காற்றின் ஈரப்பதம் காரணமாக இந்த மழை பெய்யும் என்றும், குறைந்த காற்றழுத்தம் அல்லது புயல் இதற்கு காரணம் இல்லை என்றும் பிரதீப் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து முகநூல் பக்கத்தில் பிரதீப் கூறியுள்ள தகவல்கள் இவைதான்:

டெல்டா மாவட்டங்கள்

டெல்டா மாவட்டங்கள்

இன்று மாலை முதலே டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்டவற்றில் மழை பெய்ய ஆரம்பிக்கும். இந்த மழை பாண்டிச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை பரவக்கூடும்.

உள் மாவட்டங்கள்
உள் மாவட்டங்கள் முதலில் கடற்கரை பகுதிகளில் ஆரம்பிக்கக்கூடிய மழையானது, படிப்படியாக உள் மாவட்டங்களுக்கும் விரிவடையும். வரும் 6ம் தேதி வரை இந்த மழை நீடிக்கும். ஆறாம் தேதி நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மலையோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tamil Nadu Weatherman

about an hour ago

Easterly Wave to bring rains to Chennai (4&5th) and Tamil Nadu from Tonight till 6th December
========================
A Easterly Wave (trough) is seen affecting TN coast from today. This is not due to any low pressure or cyclones. So dont believe the rumors which has been circulating. You can see the images how convergence happens close to the coast as the trough moves in (2nd photo).

Chennai and KTC

See more

Image may contain: water and outdoor
No automatic alt text available.

No automatic alt text available.
சென்னைக்கு மழை
அடுத்தடுத்த தினங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆந்திர மாநிலத்தின் சித்தூர், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம் வதந்திகள் பரவுவதை போல, பெருமழையா என்பது பற்றி இப்போதே கணிக்க முடியாது.

தமிழகம் முழுக்க

தமிழகம் முழுக்க
இந்த மழையின் தாக்கம் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் எதிரொலிக்கக் கூடும். எனவே அடுத்தடுத்த நாட்களில் தமிழகம் முழுக்கவே பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். பிபிசியின் வானிலை பிரிவும், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *