Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

இன்றைய ராசிபலன்

சென்னை: இன்றைய தினம் விருச்சிக ராசியில் சூரியன், சந்திரன், குரு, புதன் சஞ்சாரம் உள்ளது. துலாம் ராசியில் சுக்கிரன், கடகத்தில் ராகு மகரத்தில் கேது தனுசு ராசியில் சனி என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

இன்றைய தினம் விருச்சிகத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களும் அமைதியாக இருப்பது நல்லது.

Rasi Palan Today (6 December, 2018)

மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ராசியான நிறம், ராசியான எண்கள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்
ராசிக்கு எட்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. சந்திராஷ்டமம் இருப்பதால் கோபம் அதிகமாகும் பொறுமையை இழப்பீர்கள். இன்றைக்கு அமைதியை கடைபிடித்து சகிப்புத்தன்மையுடன் இருங்கள் நல்லதே நடக்கும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 3

ராசிக்கு ஏழாம் வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண் 4.

ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உதவி செய்வார்கள். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 5.

ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உதவி செய்வார்கள். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 5.

ராசிக்கு நான்காம் வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். அம்மாவிற்கு வேலைச்சுமை, வீண்டென்ஷன் வந்துப் போகும். சிறு பயணங்களால் பலன் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 5

ராசிக்கு மூன்றாம் வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்து கொள்வார்கள். அரசால் ஆதாயம்உண்டு. அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். தைரிய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் தைரியம் கூடும். ராசியான நிறம் சிவப்பு ராசியான எண் 7

சந்திரன் சஞ்சாரம் லாப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 9.

ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் இருக்கும். இன்றைய தினம் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். கணவன்-மனைவிக்குள் சிறு சிறு சச்சரவுகள் வந்து நீங்கும். அதிகம் பேச வேண்டாம். பனிச்சுமை அதிகமாகும். ராசியான நிறம் இளம் பச்சை, ராசியான எண் 8.

தனுசு: ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் உடன் சூரியன், குரு, புதன் சஞ்சாரம் உள்ளது. எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் பேசுங்கள் ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 3.

ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 2.

ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். அலுவலகத்தில் உங்களுக்கு பணி சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். அலுவலகத்தில் சாதனைகள் படைக்கும் நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 6.

ராசிக்கு ஒன்பதால் வீடான பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 2.

 

 

 

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *