Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே – டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே – டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர் ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்த நிலையில் சசிகலா- தினகரன் தனியாக ஒதுக்கப்பட்டனர். இதையடுத்து ஓபிஎஸ்- இபிஎஸ் மற்றும் சசிகலா- தினகரன் ஆகிய இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடினர். இதனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை கடந்த 2017 மார்ச் மாதம் முடக்கியது.
தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்புக்கு தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் கடந்த 2018 நவம்பர் 23ல் தீர்ப்பு வழங்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தினகரன் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் தனித்தனியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சி.எஸ். ஜிஸ்தானி, சங்கீத தீங்க்சுரா ஷேகல் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரது மேல்முறையீடு மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த திரப்பு வெளியான மறுநிமிடமே தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் சி .த. செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட கழகத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளோடு ஊர்வலமாக வந்து புரட்சி தலைவர் வாழ்க புரட்சி தலைவி வாழ்க எனவும் இரட்டை இலையை மீட்டு எடுத்த முதல்வர் ,துணை முதல்வர் வாழ்க என உற்சாகத்தோடு தொண்டர்கள் கோசமிட்டுவந்து பேருந்து நிலையம் முன்பு வெடிவெடித்து பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் சி .த செல்லப்பாண்டியன் இனிப்புகள் வழங்கினார். அவருடன்
கழக அமைப்புச் செயலாளர் ,கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் நெல்லை தூத்துக்குடி ஆவின் சேர்மன் திரு.என். சின்னத்துரை மேற்கு பகுதி கழக செயலாளர் A.முருகன் ,கிழக்கு பகுதி செயலாளர் சேவியர் , மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர், Dr.T. ராஜசேகரன், தலைமை கழக பேச்சாளர் கே பி முருகானந்தம், போக்குவரத்து கழக
மண்டல இணை செயலாளர் P.சங்கர் , மாவட்ட செயலாளர் உதவியாளரும் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி நிர்வாகி மூர்த்தி , மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு சி த செ ஜெபசிங்
துணை செயலாளர் திரு எம் சி பி ஜீவா பாண்டியன்..
ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் திரு பழனி பாண்டியன்,
மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் சி த செ ராஜசிங் முன்னாள் மாமன்ற உறுப்பினர்
முருகேசன் ,ஐயப்பன் மற்றும் வட்ட செயலாளர்கள் வட்ட பிரதிநிதி கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Check Also

அதிமுக அதிர்ச்சி.. பாமக கடுப்பு.. இனிதான் கூட்டணிக்கு இருக்குது சிக்கல்.. எல்லாம் இவரால்தான்!

சென்னை: ஒரு பேட்டி.. ஒரே ஒரு பேட்டி.. அதிமுக, பாமக என கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது என்றால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.