Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

உணவுப்பொருளுக்கு பதிலாக அங்கன்வாடியில் பணம் தரும் திட்டம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

அங்கன்வாடிகளில் உணவுப்பொருட்களுக்கு பதில் ரொக்கம் வழங்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் (ஐசிடிஎஸ்) கீழ், நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடிகளில் சத்துணவு பொருட்கள், பள்ளிக்கு முந்தைய கல்வி மற்றும் சுகாதார சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, சோதனை முறையில் ஐசிடிஎஸ் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உணவுப் பொருட்களுக்கு பதில் ரொக்கமாக வழங்கலாம் என மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு பரிந்துரை வழங்கி இருந்தது. இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வந்தது.

இந்நிலையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் ஆர்.கே.ஸ்ரீவாஸ்தவா மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடந்த 12-ம் தேதி கடிதம் எழுதி உள்ளார். அதில், “நிதி ஆயோக் பரிந்துரை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அங்கன்வாடிகளுக்கு உணவுப் பொருட்களுக்கு பதில் ரொக்கம் வழங்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை” என கூறப்பட்டுள்ளது. – பிடிஐ

Check Also

அதிமுக அதிர்ச்சி.. பாமக கடுப்பு.. இனிதான் கூட்டணிக்கு இருக்குது சிக்கல்.. எல்லாம் இவரால்தான்!

சென்னை: ஒரு பேட்டி.. ஒரே ஒரு பேட்டி.. அதிமுக, பாமக என கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது என்றால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.