Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என்றும், இது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கு முன் 600 ஆண்டுகளுக்கு முன்னரே உத்தரகாண்ட் மிகப் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அதே போன்றதொரு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மக்களிடயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேராடூனில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெங்களூரு இந்தியன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் பேராசிரியர் விஜோத் கே. கவுர், நிலநடுக்கம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத கட்டிட தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் உயிரிழப்புக்கள் பெருமளவில் தவிர்க்கப்படும் என்றார்.

மேலும் வர இருக்கும் பேரழிவில் இருந்து மக்களை காக்க தேவையான ஏற்பாடுகளை உத்திரகாண்ட் அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் வழியுறுத்தி உள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகங்கள் இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு உதவ தயாராக உள்ளதாகவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Check Also

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்: தடை செய்ய கோரி தமிழக அரசிற்கு தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *