Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

உலக மகளிர் யூத் பாக்சிங் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதி

உலக மகளிர் யூத் பாக்சிங் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதி

கவுகாத்தி : உலக மகளிர் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 5 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் கால் இறுதி ஆட்டங்களில் நேற்று களமிறங்கிய 5 இந்திய வீராங்கனைகள் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறினர். இத்தாலியின் ஜியோவன்னா மார்செஸ் உடன் மோதிய ஜோதி குலியா (51 கிலோ) முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.

ஷஷி சோப்ரா (57 கிலோ) தனது கால் இறுதியில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் சந்துகஷ் அபில்கானை வீழ்த்தினார். அங்குஷிதா போரோ (64 கிலோ), நேஹா யாதவ் (+81 கிலோ), அனுபமா (81 கிலோ) ஆகியோரும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர். இதனால் இந்திய அணிக்கு 5 வெண்கலப் பதக்கங்கள் உறுதியாகி உள்ளது. அரை இறுதியில் வென்று பைனலுக்கு முன்னேறினால் வெள்ளிப் பதக்கம் உறுதியாகும். பைனலில் வெற்றியை வசப்படுத்தும் வீராங்கனை தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்வார்.

Check Also

முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *