Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பக்தி, உறுதி ஆகிய நான்கையும் கடை பிடித்தால் வெற்றி நிச்சயம் தூத்துக்குடி எஸ்பி முரளிரம்பா மாணவர்களுக்கு அறிவுரை

நம் வாழ்க்கைக்கு தேவையான நான்கு வார்த்தைகள் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பக்தி, உறுதி என ஆலந்தலை பள்ளி விழாவில் தூத்துக்குடி எஸ்பி முரளிரம்பா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.
திருச்செந்தூர் ஆலந்தலை மீனவ கிராமத்தில் உள்ள முப்பள்ளிகளான திருக்குடும்பம் உயர்நிலைப்பள்ளி, கார்மெல் நடுநிலைப்பள்ளி மற்றும் திருக்குடும்பம் தொடக்கப்பள்ளிகளின் 2018-2019ம் ஆண்டுக்கான விளையாட்டுப்போட்டி விழா இன்று (29.01.2019) நடைபெற்றது. இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., முரளி ரம்பா,சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் மாணவ, மாணவிகள் எப்போதுமே படிக்கவேண்டும் என்ற அவசியமில்லை, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது விளையாட வேண்டும், அதாவது யோகா, உடற்பயிற்சி மற்றும் மெடிட்டேஷன் போன்றவைகளில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும், 
படித்த படிப்பு கூட நமக்கு ஞாபகம் இருக்கும். விளையாட்டுத்துறையில் நன்றாக விளையாடினால் மாவட்ட அளவில், பல்கலைக்கழகம் மற்றும் மாநிலம் அளவில் வெற்றி பெற்று அதன் மூலம் நல்ல வேலையில் சேருவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நன்கு விளையாடுபவர்களுக்கு உதவி செய்வதற்கு காவல்துறை தயாராக உள்ளது. நல்ல ஆரோக்கியமான மன நிலை மற்றும் ஆரோக்கியமான உடல்நிலை இருந்தால்தான் நன்றாக படிக்க முடியும். நாம் பிறக்கும் போது எப்படியிருக்கிறோம் என்பது கடவுள் கொடுத்தது, 
நாம் இறக்கும்போது அப்படியே இருந்தால் அதற்கு நாம்தான் காரணம், நாம் முன்னேறுவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளது, நாம் நன்கு படித்து அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நாம் இப்போதிருந்தே ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதே மாதரி நம் மாவட்டத்தில், மாநிலத்தில், நாட்டில், உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தினமும் செய்தித்தாள்கள் படிக்க வேண்டும். 
இப்போது எல்லாருடைய கைகளிலும், செல்போன், லேப்டாப், கணிணி மற்றும் இணையதள வசதி இருக்கிறது. இது இருபக்கம் உள்ள முனை உள்ள ஆயுதம் போன்றது நல்ல வழியில் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். கெட்ட வழியில் பயன்படுத்தினால் அது நம்மை அழித்துவிடும். மாணவ, மாணவிகள் மொபைல் பார்ப்பது கூடாது, பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்கள் செல்போன் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
நம் வாழ்க்கைக்கு தேவையான நான்கு வார்த்தைகள் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பக்தி, உறுதி ஆகிய நான்கையும், அதாவது ஒழுக்கத்தை கடைபிடித்து எந்த செயலில் ஈடுபடுகிறோமோ, அதில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, அதன் மீது பக்தியுடனும், உறுதியுடனும் செயல்பட்டால் வாழக்கையில் வெற்றி நிச்சயம் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தி சிறப்புரையாற்றினார். இவ்விழாவிற்கு தோமையார்புரம் பங்குத்தந்தை அருட்பணி விக்டா லோபா தலைமை வகித்தார், பங்கு தந்தை ஜெயக்குமார், குலசேகரப்பட்டிணம் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Check Also

ராங்கியாக த்ரிஷா ?

த்ரிஷா ராங்கியாக மாறியது குறித்து உங்களுக்கு தெரியுமா? தலைப்பை பார்த்ததும் த்ரிஷா திமிர் பிடித்த ராங்கியாகிவிட்டார் என்று நினைக்க வேண்டாம். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.