Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

கரையேறும் கடல் பாம்புகளால் கடலூர் மக்கள் பீதி ..

சுனாமிக்கு பிறகு கடல்சீற்றத்தின் காரணமாக அவ்வபோது கடல் மாறுதல் ஏற்பட்டு வருகிறது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் காலை மாலை வேளைகளில் கடலில் குளித்துவிட்டு காத்து வாங்க கடலூர் சுற்றுவட்டார மக்கள் கடற்கரையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து மகிழ்ச்சி அடைவார்கள் இந்நிலையில் இன்று காலை சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்தபோது தோள்களில் சுற்றியவாறு கடல் பாம்புகளைக் கண்டு சிறியவர்கள் பதறி அடித்து ஓடினார்கள் இதையறிந்து நம் அங்கு உள்ள மீனவர்களிடம் விசாரித்தபோது ஆள் நடமாட்டமின்றி

ஆழ்கடலில் உள்ள பாறைகளின் இடையில் வசிக்கும் கடல் பாம்புகள் சில ஆண்டுகளாக இயற்கையின் மாற்றத்தால் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது மீனவர்கள் வலையில் அதிகப்படியாக கடல் பாம்புகள் சிக்குகிறது இதனால் அதிக இன்னல் ஏற்படுவதாகும் கூறுகின்றனர் தொடர்ந்து இதே போல் கரையோரங்களில் பாம்புகள் வருவதால் மீனவ மக்கள் அச்சத்தில் உள்ளார்கள் இதேபோல் கடலூரை சுற்றியுள்ள கிராம மக்கள் பொழுதுபோக்குக்காக காலை மாலை வேளைகளில் கடலூர் கடற்கரைக்கு வருபவர்கள் அச்சத்துடன் கடலில் குளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *