Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. போராட்டம்.

திருவண்ணாமலை. மார்ச். 15.

   திருவண்ணாமலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. வினர்  1000 க்கு மேற்பட்டவர்கள்  கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கவர்னர் ஆய்வு

தமிழகம் முழுவதும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்க்கொள்ள கவர்னர் புதன் இரவு கார் மூலம் சென்னையிருந்து திருவண்ணாமலை வந்தார்.
திருவண்ணாமலை  – செங்கம் சாலையில் உள்ள பொது பணித்துறை விருந்தினர் மாளிகைக்கு வந்த கவர்னரை கலெக்டர் கந்தசாமி புத்தகம் அளித்து வரவேற்றார். எஸ். பி. பொன்னி தலைமையிலான போலீஸ் அணிவகுப்பு மரியாதையையும் கவர்னர் ஏற்றுக்கொண்டார் .
இன்று வியாழக்கிழமை திருவண்ணாமலை – செங்கம் சாலையில் உள்ள சந்தை மேட்டுப்பகுதியில் தூய்மை பாரத திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கவர்னர் ” தூய்மை சக்தி ரதத்தை”
தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு ரத்ததான முகாமை பார்வையிட்டார். தூய்மை பாரத திட்டம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை. ஆட்டோக்களில் ஒட்டியும். சாலையை பெருக்கி சுத்தப்படுத்தவும் கவர்னர் விழிப்புணர்வு  ஏற்படுத்தினார்.

தி .மு .க .போராட்டம்
இதற்கிடையே கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை காந்தி சிலை அருகே திமுக முன்னாள் அமைச்சர் எ. வ. வேலு தலைமையில்  1000 க்கு   மேற்பட்ட தி.மு.க வினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

Check Also

தூத்துக்குடியில் ஜெ. பிறந்தநாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.