Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடியது திருவண்ணாமலை. இங்குள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா காலையில் நடைபெற்றது. இதற்காக அதிகாலை நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.Image result for திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

அண்ணாமலை உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளின் கொடிமரம் அருகே எழுந்தருளினர். வேதமந்திரங்கள், திருமந்திரங்கள் முழங்க 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா என பக்தி முழக்கமிட்டு வழிப்பட்டனர். இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கொடியேற்ற விழாவில் தமிழகம் முழுவதில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீப திருவிழாவின் முக்கிய திருவிழாவாக டிசம்பர் 12-ம் தேதி மகாதீபம் மலை உச்சியில் ஏற்றப்படுகின்றது. தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *