Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

குதிகாலில் ஏற்படும் வெடிப்பை சரி செய்ய உதவும் இயற்கை வைத்தியங்கள்!

குதிகாலில் ஏற்படும் வெடிப்பை சரி செய்ய உதவும் இயற்கை வைத்தியங்கள்!

கால்களை முறையாக பராமரிக்காமல் இருந்தாலோ அல்லது வறட்சியாக இருந்தாலோ பாதங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு வலி ஏற்படக் கூடும். இதை சரி செய்ய கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தி எந்தவிதமான பயனும் இல்லையா? அப்ப வெடிப்பை சரி செய்ய இந்த இயற்கை வழிகளை செய்து பாருங்க.

  • வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து கால்களில் ஊற வைத்து பின்னர் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த கலவையை காலில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்புகள் சரியாகும். இரவு தூங்குவதற்கு முன்னர் இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • பெரும்பாலும் வெடிப்பானது வறட்சியின் காரணமாகவே ஏற்படுகிறது. எனவே ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் பாதங்கள் மென்மையாக இருக்கும்.
  • வேப்பிலையை அரைத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பாதங்களில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் வெடிப்பு விரைவில் சரியாகி விடும்.
  • அரிசி மாவு, ஆப்பிள் சீடர் வினிகர், தேன் மூன்றையும் கலந்து ஆலிவி ஆயிலுடன் சேர்த்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் வெடிப்பு சரியாகிவிடும்.
  • வாழைப்பழத்தை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து பசையாக்கி கால்களில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
  • வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து கலந்து அந்த நீரில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் குதிகால் வெடிப்பு விரைவில் குணமாகும்.
  • எலுமிச்சை சாறுடன் பப்பாளியை சேர்த்து பாதங்களில் தடவி 20 நிமிடம் கழித்து கால்களை கழுவினால் பாதம் மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் மாற்றலாம்.

Check Also

கோடைக்காலத்தில் கண்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்… மருத்துவர் தரும் டிப்ஸ்!

கோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும். குறிப்பாக, அக்னி நட்சத்திரத்தின்போது வெப்பத்தின் தாக்கம் கூடுதலாக இருக்கும். அப்போது உடல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.