Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

கும்பகோணம் இதயா கல்லூரியில் மகளிர் கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக அளவிலான பூப்பந்து போட்டி..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் இதயா கல்லூரியில் மகளிர் கல்லூரிகளுக்கு பல்கலை கழக அளவிலான பூப்பந்துப் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இப்போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் முதலான மாவட்டங்களிலிருந்து பதினெட்டு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில்  சிறப்புவிருந்தினராக கும்பகோணம் டி.எஸ்.பி. திரு. கணேசமூர்த்தி அவர்களும் பாரதிதாசன் பல்கலைக் கழக உடற்கல்வி மேலான்மை இயக்குனர் யோக ரத்னா டாக்டர்.திருமதி. உமா அவர்களும் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர்.நஜின் அமலா அவர்கள் தலைமைதாங்கினார்.
கல்லூரி செயலர் அருட்சகோதரி திருமதி. ஆரோக்கியமேரி அவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில்  கும்பகோணம் இதயா மகளிர்  கல்லூரி அணி முதலிடமும்  திருச்சி காவேரி கல்லூரி இரண்டாம் இடமும் கும்பகோணம் மகளிர் கல்லூரி மூன்றாமிடமும் லால்குடி  பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி நான்காம் இடமும் பெற்றன.

இறுதியில் இதயா கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியை திருமதி. நிர்மலா மார்டின் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *