Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

கேம் சேஞ்சராக மாறிய பிரேமலதா.. அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த மக்கள்.. பழிக்கு பழி!

வேலூர்: வேலூரில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் லோக்சபா தேர்தலில் அதிமுக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வேலூரில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 141423 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 125726 வாக்குகள் பெற்றுள்ளார்.

எப்படி

எப்படி

வேலூர் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆம்பூர் மக்கள்தான் அதிகம் வாக்களித்து இருக்கிறார்கள். ஆம்பூரில் அதிமுக கூட்டணி எடுத்த அதிக வாக்குகள்தான் திமுகவை பின்னடைவை நோக்கி தள்ள வைத்துள்ளது. ஆம்பூர் மக்கள் அதிமுகவிற்கு மொத்தமாக வாக்குகளை வாரி வழங்கி இருக்கிறார்கள்.

என்ன காரணம்

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆம்பூர் என்பது தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சொந்த ஊர் ஆகும். பிரேமலதாவிற்கு அந்த ஊரில் பெரிய அளவில் மதிப்பும் வரவேற்பும் இருக்கிறது. அதேபோல் அரசியல் ரீதியாக வேலூர் தேமுதிகவுக்கு கொஞ்சம் ஸ்டிராங் சோன்.

செல்வாக்கு உள்ளது

செல்வாக்கு உள்ளது

அதுமட்டுமில்லாமல் சமுதாய ரீதியாகவும் பிரேமலதாவிற்கு ஆம்பூரில் நல்ல பலம் இருக்கிறது. இதைத்தான் அதிமுக மிக சரியாக பயன்படுத்திக் கொண்டது என்று கூற வேண்டும். ஆம்பூரில் அதிமுக சார்பாக யாருமே தேர்தலில் சரியாக பிரச்சாரம் செய்யவில்லை.

மாஸ்

மாஸ்

ஆனால் ஆம்பூரில் தேமுதிகவின் பிரேமலதா களமிறங்கி பிரச்சாரம் செய்து வந்தார். ஆம்பூர் பொறுப்பு மொத்தமும் பிரேமலதாவிடம் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் அங்கு மிக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஆம்பூரில் தெருத்தெருவாக பிரேமலதா பிரச்சாரம் செய்தார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இது பெரிய அளவில் அதிமுகவிற்கு கை கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் லோக்சபா தேர்தல் கூட்டணியின் போது திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் பிரேமலதா இடையே பெரிய மோதல் வந்தது. அதனால் அவரின் மகனுக்கு எதிராக பிரேமலதா மிக கடுமையாக பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.

Check Also

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.