Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

கோடை காலத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர போக்குவரத்துகாவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு, தர்பூசணி மற்றும் மோர் போன்ற குளிர்பானங்கள் வழங்கும் விழாவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா, இ.கா.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.


தூத்துக்குடி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு, தர்பூசணி மற்றும் மோர் போன்ற குளிர்பானங்கள் வழங்கும் விழாவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா, இ.கா.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு, தர்பூசணி மற்றும் மோர் போன்ற குளிர்பானங்கள் வழங்கும் விழாவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா, இ.கா.ப. அவர்கள் துவக்கி வைத்தார். பின் அவர் அளித்த பேட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் ஆகிய 3 போக்குவத்துப்பிரிவுகளில் பணிபுரியும் போக்குவரத்துப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் இன்றிலிருந்து மே மாதம் வரை 3 மாதங்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஆகியவை ஒரு நாளைக்கு 4 முறை வழங்கப்படும் என்றும், தூத்துக்குடி போன்று கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் போக்குவரத்துப்பிரிவுகளிலும் இன்று முதல் போக்குவரத்துப்பிரிவு காவலர்களுக்கும் வழங்கப்படும், தூத்துக்குடி போக்குவரத்துப்பிரிவில் 35 காவலர்களும், கோவில்பட்டியில் 13 காவலர்களும், திருச்செந்தூரில் 9 காவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா தெரிவித்தார். இவ்விழாவிற்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன், தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. தீன் குமார், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி, காவல்துறை போக்குவரத்துப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர். 

Check Also

அதிமுக அதிர்ச்சி.. பாமக கடுப்பு.. இனிதான் கூட்டணிக்கு இருக்குது சிக்கல்.. எல்லாம் இவரால்தான்!

சென்னை: ஒரு பேட்டி.. ஒரே ஒரு பேட்டி.. அதிமுக, பாமக என கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது என்றால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.