Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

கோவில்பட்டிக்கு 11-ம் தேதி வரும் முதல்வருக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.

கோவில்பட்டிக்கு 11-ம் தேதி வரும் முதல்வருக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார். கோவில்பட்டிக்கு 11-ம் தேதி வரும் முதல்வருக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார். காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள அ.தி.மு.க மாவட்ட கழக அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் வரும் 11-ம் தேதி கோவில்பட்டிக்கு வருவதை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்து பேசுகையில் மறைந்த முதலமைச்சர் அம்மா ஆட்சியில் கோவில்பட்டி மக்களின் தாகம் தீர்க்க 2வது குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவுப்பெற்ற நிலையில் 11-ம் தேதி மதியம் 2.30 மணியளவில் தமிழகம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜ் அவர்கள் மேற்பார்வையில் அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. முதல்வர் வருகையொட்டி மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர். அம்மா வழியில் பணியாற்றும் நம் இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று தீய சக்தி கருணாநிதியின் கூட்டம் திட்டமிட்டு தேவையில்லாத செயல்களில் ஈடுப்படப்போவதாக அறிவித்துள்ளனர். அதை எதிர்க்கொள்வதற்கு அரசும் நம் இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களும் தயாராக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள மாநில மற்றும் எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் முன்னாள் எம்.பி.கள், எம்.ஏ-க்கள் மாவட்ட அணி நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் கிளை கழக வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட எம்.ஜி.ஆர் அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் கோவில்பட்டி நோக்கி அணி திரள வேண்டும். மறைந்த எம்.ஜி.ஆர், அம்மா வழியில் செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிக்காட்டுதலின் பெயரில் தூத்துக்குடி மாவட்டம், என்றும் அ.தி.மு.க-வின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் உழைத்திட வேண்டும். தொண்டர்களுக்கு தேவையான உதவிகளை நானும் அமைச்சரும் இணைந்து உங்களுக்கு உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளோம் என்றார். கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் மகளிர் அணி செயலாளர் குருத்தாய், தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா, இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மருத்துவ அணி செயலாளர் ராஜசேகர், மீனவர் அணி செயலாளர் டார்ஜன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் துறையூர் கணேச பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஞானகுருசாமி தர்மராஜ், சண்முகவேல், சௌந்தரராஜன், அய்யா துறைபாண்டி மாவட்ட துணைச் செயலாளர்கள் மோகன், தங்கமாரியம்மாள், பொருளாளர் ஜெபமாலை, பகுதி செயலாளர்கள் முருகன் ராமகிருஷ்ணன், மீனவர் அணி தலைவர் டெலஸ்பர், இணை செயலாளர் ஜோசப் முன்னாள் துணை மேயர் சேவியர், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், துணைத் தலைவர் ரத்தினம், எம்.ஜி.ஆர் மன்றம் இணை செயலாளர் ஜோதி மணி, அமிர்தகணேசன் நகர, அம்மா பேரவை செயலாளர் ராமகிருஷ்ணன், மாணவர் அணி செயலாளர் சாலமோன் ஜெயசீலன், மகளிர் அணி இணை செயலாளர் சண்முகத்தாய், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆயிஷா கல்லரசி, மாரியப்பன், அய்யாதுரை பாண்டியன், வட்ட பிரதிநிதியும் மாவட்ட செயலாளர் உதவியாளருமான P.மூர்த்தி     அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல இணைச்செயலாளர் சங்கர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் ராஜாசிங், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், பேரூர் கழக செயலாளர்கள் செந்தில் ராஜ்குமார், செல்லத்துரை, ஆத்திப்பழம், வட்ட கழக செயலாளர்கள் கருப்பசாமி, அன்புலிங்கம், பெருமாள், விஜயன், ரெங்கன், நயனார், சீனிவாசன், ஜெய்கணேஷ், அந்தோணி ராஜ், ஈஸ்வரன், முன்னாள் கவுன்சிலர்கள் கோல்டன் அருள்தாஸ், பொன்ராஜ், செல்லப்பா, ஜெய்குமார், தலைமை கழக பேச்சாளர்கள் முருகானந்தம் ராஜசேகர், மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ், வட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், மூர்த்தி, இசக்கிமுத்து, கோட்காசிராஜன், தொழிற்சங்கத்தை சேர்ந்த சண்முகராஜா, மீனாட்சிசுந்தரம், ராஜேந்திரன், கருப்பசாமி, ஓய்வு டெரன்ஸ், அந்தோணி, உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *