Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

சாலை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் 20 சதவீதம் உயிரிழப்பு குறைந்துள்ளது – ஆட்சியர் தகவல்.

சாலை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் 20 சதவீதம் உயிரிழப்பு குறைந்துள்ளது – ஆட்சியர் தகவல்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் சாலை விழிப்புணர்வு விழா கடைப்பிடிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி நகரில் சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி இரு சக்கர மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டு ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்தினால் மரணம் அடைவோர் எண்ணிக்கையினை குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி சாலை விபத்து நடைபெறும் முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் நிறுவப்பட்டும் எச்சரிக்கை பலகை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வாகன ஓட்டிகள் சாலைவிதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டை காட்டிலும் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் மூலமாக 20% விபத்து மூலமாக உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஆற்றுப்பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தெரியவந்தால் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரையில் கழிவுகள் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.