Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

சின்னம்மா தான் அடுத்த முதல்வர்…!!! முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…!!!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான  மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த மாரியப்பன் கென்னடி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரை  மிகவும் தாறுமாராக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில்  மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீர்ப்பை குறை சொல்ல நான்  விரும்பவில்லை.நாங்கள்  மேல்முறையீடு செய்து கண்டிப்பாக  வெற்றி பெறுவோம் என்றும்,
மதுரை மண்ணை தன்னுடைய சுயநல இலாபத்திற்காக தொண்டர்களை குழப்பும் விதமாக ஆர்.பி.உதயகுமார் பேசி வருகிறார்.

அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 150 வழக்கறிஞர்களில் தற்போது பத்து பேர் கூட அவர் பின்னால் இல்லை.
மேலும் கூறிய அவர், ஆர்.பி.உ  எப்படி பதவி பெற்றார் என்பது இங்குள்ள எல்லோருக்குமே தெரியும். அவர் ஒரு பெரிய ஜமீன்தாரெல்லாம் கிடையாது. அவர் எப்படி உருவாகி வந்தார் என்பெதெல்லாம் எங்களுக்கு தான்  தெரியும்.
சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவதற்கே குடும்பத்துடன் கிட்டத்தட்ட 100 பேரிடம் கும்பிடு போட்டு கும்பிடு போட்டு , அனைவரது காலில் விழுந்து போட்டியிட வாய்ப்பு பெற்றவர்தான் இந்த  ஆர்.பி.உ. நாங்கள் எங்களுக்கு பிடித்தவரை எங்கள்  தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறோம்ஆனால்,
ஆர்.பி.உதயகுமாரைப்போல பதவிக்காக காட்டிக்கொடுப்பவர்கள் நாங்கள் கிடையாது என்று சற்று காட்டமாக பதில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில்  பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது சின்னம்மா தான் அடுத்த முதல்வர் முதன்முதலில்  கூறியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து இளைஞர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தற்கொலை செய்த தங்கதுரை குடும்பத்தினர் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கிறார்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பல்வேறு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.