Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

செங்கத்தில் ஊர் பொதுமக்கள் தலைமையில் மாஹா கும்பாபிஷேகம்

செங்கம் 16வது வார்டு கிருஷ்ணாபுரம் பாண்டுரங்கன் நகரில் எழுந்தருயிலுள்ள அருள்மிகு சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் ஊர் பொது மக்கள் அனைவரது முன்னிலையிலும் ஜீர்னோத்தாரண அஷ்ரபந்தன மஹா கும்பாமிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் யாகா பூஜையு, கோ பூஜை, கலசபூஜை, நவ கிராக பூஜை நடைபெற்றது. இதனைதொடர்ந்து கணபதி, லட்சுமி, துர்கா, நவகிராக மற்றும் திரவியங்கள் ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் தம்பதியர் பூஜை நடைபெற்றது. இதனையடுத்து பூர்னாஹீதி தீபாரதனையுடன் கலசங்கள் ஆலயத்தை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் மீதுள்ள கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இக்கும்பாபிஷேகத்தை  ஷேகத்தை செங்கம் வேனூபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் பட்டாச்சாரி சீதாராம ஐயர் அவர்கள் நடத்திவைத்தார்.

பின்னர் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலந்துக்கொண்ட பக்தர்கள் மீது தீர்தம் தெளிக்கப்பட்டது. பின் அனைவருக்கும் அறுசுமை விருந்து வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மனின் அருள் பெற்றனர்.

Check Also

இன்றைய ராசிபலன்

சென்னை: இன்றைய தினம் விருச்சிக ராசியில் சூரியன், சந்திரன், குரு, புதன் சஞ்சாரம் உள்ளது. துலாம் ராசியில் சுக்கிரன், கடகத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *