Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

ஜெ. 71 வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் மாபெரும் மின்னொளி கபாடி போட்டி 300 அணிகள் பங்கேற்பு விழா கோலம் பூண்டது தூத்துக்குடி மாநகரம்; 5071 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி .த. செல்லப்பாண்டியன் தகவல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில்  வெகு சிறப்பாக கொண்டாடுவது குறித்து மாவட்ட செயலாளர்     சி . .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  தூத்துக்குடியில் வெகு சிறப்பாக  நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாள் விழா வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் விழா நிகழ்வுகள் குறித்து  முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கனி ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய  முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளருமான சி.த .செல்லப்பாண்டியன் பேசுகையில் நமது இயக்கத்தின் வட்ட செயலாளர்கள்

 கிளை, ஒன்றியம், நகர, மாநகர பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் ஜெ. 71 வது பிறந்த  நாளையொட்டி  மாவட்டம் முழுவதும் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கவேண்டும் ஓலி பெருக்கி அமைத்து கழக பாடல்கள் ஒலிக்க செய்யவேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மாவட்ட கழகம் சார்பில் 5071 பேருக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பாக தையல் மிஷின், சைக்கிள், சேலை, ஊனமுற்றோர்க்கான மிதிவண்டி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபாடி போட்டி நடைபெற உள்ளதாகவும் இந்த போட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைக்க உள்ளதாகவும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட  அளவிலான கபாடி போட்டியில் சுமார் 300அணிகள்  பங்கேற்கிறது.   இதில் ஆண்கள் பிரிவுக்கு முதல் பரிசு 50,071, இரண்டாம் பரிசு 40,071, மூன்றாம் பரிசு 25,071 ,நான்காம் பரிசு 25,071  மற்றும் சிறந்த வீரர்கான பரிசு யமஹாபைக் பெண்களுக்கான பிரிவுக்கு முதல் பரிசு 30071 இரண்டாம் பரிசு 20071 மூன்றாம் பரிசு 10071, நான்காம் பரிசு 10,071 சிறந்த வீராங்கணைக்கான பரிசு தங்க நாணயம் மற்றும்  ஜெ. அவர்களின் நினைவு பரிசு கோப்பைகள் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார் .   22/02/2019 முதல் 24/02/2019 வரை 3   நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை தூத்துக்குடி குருஸ் பர்னாந்து சிலை முன்பு இருந்து கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் வீரர்களுடன் ஊர்வலமாக பாலவிநாயகர் கோவில் வழியாக எஸ்.ஏ.வி பள்ளி மைதானம் வந்தடைகிறது.இந்த போட்டியை மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் துவக்கிவைத்து பரிசு வழங்க உள்ளார்கள் என்று தெரிவித்தார் . இந்த நிகழச்சியில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்று முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாட முன்வரவேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் , இளைஞர் இளம்பெண் பாசறை மாநில துணை செயலாளரும் நெல்லை தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னதுரை முன்னிலை வகித்தார். மேற்கு பகுதி கழக செயலாளர்  ஏ முருகன் வரவேற்புரை வழங்கினார்.. இந்த நிகழ்ச்சியில்..

நெல்லை தூத்துக்குடி மீனவ இணைய தலைவர் கிழக்கு பகுதி செயலாளர் திரு. பி.சேவியர்  மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் தங்க மாரியம்மாள் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு பி.டி.ஆர் ராஜகோபால் மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர், Dr.R. ராஜசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன்

மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் U. S சேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய் என்ற விண்ணரசி, பொதுக்குழு உறுப்பினர்கள்..

அய்யாதுரை பாண்டியன், எஸ் கே மாரியப்பன், கே.ஜான்சி..

கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் சி. த.                        செ. ராஜசிங், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு சி செ ஜெபசிங் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் எம் சி பி ஜீவா பாண்டியன் ..முன்னாள் நகர்மன்றத் தலைவர் மனோஜ் குமார்

ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி.பி.சண்முகவேல், மாவட்ட மீனவரணி இணை செயலாளர் டெலஸ்பர்

மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ்

மேற்கு பகுதி துணைச் செயலாளர் கணேசன்

முன்னாள் தொகுதி கழக இணை செயலாளர் ஞாயம் ரொமால்டு

ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனி பாண்டியன் மேலூர் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள்.. சிவசுப்பிரமணியன் அன்பு லிங்கம்

சந்தனம் பாலசுப்பிரமணியன் வேல்முருகன், 3வது வட்ட கழக செயலாளர் ஏ முருகன்

, அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி சங்கர் அதிமுக மாவட்ட செயலாளர் சி .செல்லப்பாண்டியன் உதவியாளரும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகி பி. மூர்த்தி ,ஐயப்பன், அருண், சண்முகராஜ், வேல்முருகன், முருகானந்தம் பேச்சாளர் ராஜசேகர், ஆரோன் முன்னாள் கவுன்சிலர் முருகேசன் மற்றும்.. அனைத்து வட்ட செயலாளர்கள் வட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு மாவட்ட கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறுசுவை விருந்து பறிமாறப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இருந்து கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் உற்சாகதோடு பங்கேற்றனர்.

Check Also

பழிக்குப் பழி.. பைனான்சியர் கொடூர கொலை.. பரபர பின்னணி

மதுரை: பழிக்கு பழி வாங்கவே, பைனான்சியர் ராஜாவை.. ஓட ஓட வெட்டி கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சேவல் சண்டையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.