Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் ?

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் பொருளாதாரத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும் என்று பல மாதங்களாக நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அதன் அடிப்படையில் தான் பல்வேறு திட்டங்களை நாங்கள் அறிவித்து இருக்கிறோம். இதில் முக்கியமான திட்டம் ஏழைகளுக்கு மாதம் ரூ 6 ஆயிரம் வழங்கும் வருமான உத்தரவாத திட்டமாகும்.

பாரதீய ஜனதா ஆட்சியில் வாங்கும் சக்தியை மக்கள் இழந்து விட்டார்கள். விவசாயிகள் மிகப்பெரிய கஷ்டத்தை சம்பாதித்து வருகிறார்கள். வேலை வாய்ப்பின்மை மோசமான நிலையை எட்டி உள்ளது. இவற்றை எல்லாம் சரி செய்யும் வகையில் எங்களது திட்டங்கள் இருக்கும்.

காங்கிரஸ் கட்சி இத் தேர்தலில் பல மாநிலங்களில் மிக சிறப்பான வெற்றி பெறும். தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் எங்களுக்கு சிறந்த வெற்றி கிடைக்கும். தமிழ்நாட்டை பொறுத்த வரை எங்களது கூட்டணி எதிரிகளை முறியடிக்கும். அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

உத்தரபிரதேசத்தில் நாங்கள் தனித்து போட்டியிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் தொகுதிகளை கைப்பற்றுவோம். இதற்காகத்தான் பிரியங்காவையும், ஜோதி ஆதித்ய சிந்தியாவையும் அங்கு பொறுப்பாளராக நியமித்து இருக்கிறோம். இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

Check Also

வெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி.! கூறியது என்ன…?

வெறும் நான்கு மணி நேரப் பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த பிரதமர் மோடி சம்பந்தனிடம் கூறியது என்ன…? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.