Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடியின் வளர்ச்சியே எனது கனவு. பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தொகுதி வளர்ச்சி குறித்த தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, நாட்டின் விஞ்ஞான வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பேசினாலும் சரி, இராணுவ வீரர்கள் குறித்து பேசினாலும் சரி அதை எதிர்கட்சிகள் தான் அரசியலாக்குகின்றன. விஞ்ஞான வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பேசியது சரியானது தான்.

விஞ்ஞானிகளுக்கு தூண்டுகோலாக பிரதமர் மோடி இருக்கிறார். பாஜக ஆட்சியில் 50 கோடி மக்களுக்கு 5 லட்சம் மதிப்பில் மருத்துவகாப்பீடு திட்டம் கொண்டு வந்த போது அதற்கு நிதி எங்கே என்று கேட்ட காங்கிரஸ் கட்சி தற்போது பாராளுமன்ற தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் தருவதாக அறிவித்துள்ளது. இதற்கு ரூ. மூன்றரை லட்சம் கோடி பணம் வேண்டும். அந்த பணம் எங்கிருந்து வரும் ?.பிரதமர் மோடி மருத்துவகாப்பீடு திட்டத்தில் ரூ. 5.4 லட்சம் வழங்கி வருகிறார்.

பாஜக மற்றும் அதிமுக அரசு எந்த திட்டம் அறிவித்தாலும் அதை தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது என  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுகிறது. ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவேன் என பிரதமர் மாேடி கூறவில்லை. அந்த அளவிற்கு கருப்புபணம் உள்ளது என்று தான் கூறினார். ஆட்சி அதிகாரம் இருந்தால் அதை எப்படி துஷ்பிரயோகம் செய்வது என்பதற்கு உதாரணம் கனிமொழி. பாஜக வெற்றி பெற்றால் தூத்துக்குடி துறைமுகத்தை தாரை வார்த்து விடுவார்கள் என பீட்டர் அல்போன்ஸ் கூறியது முற்றிலும் தவறானது.

மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளியே கொண்டு வரப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஜெயலலிதா மீது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்ன திடீர் அக்கறை ? தூத்துக்குடியின் வளர்ச்சியே எனது கனவு. தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ரயில்நிலையம் ஆகியவை ஊருக்கு வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற திட்டத்தை எதிர்க்கிறார்கள். சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பேருந்து நிலையம் ஊருக்கு வெளியே தான் உள்ளது. வளர்ச்சி திட்டங்களை எதிர்த்து அரசியலாக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜன் தனது தேர்தல் அறிக்கையை

வெளியிட்டார். அதனை அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பெற்று கொண்டார். அந்த அறிக்கையில் தூத்துக்குடியில் அணைக்கட்டுகளை சீரமைத்து நீர்வளத்தை மேம்படுத்துவேன். பனைத்தொழில் உற்பத்தி பொருட்களுக்கு தனி சந்தை அமைத்து தொழிலாளர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பேன்.

தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொழில்பூங்கா அமைத்து தொழில்வளர்ச்சி சாலையாக மாற்றுவேன். திருச்செந்தூர் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு தனி வழித்தடம் அமைப்பேன். குடவரை கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் அமைந்துள்ள பகுதியினை சுற்றுலா தலமாக்குவேன். புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவேன். 

உப்பளதொழில் பாதுகாக்கப்படும். உப்பள தொழிலாளர்கள் நலன் பாதுகாக்கப்படும். தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்தி பெரிய சரக்கு கப்பல் வந்து செல்லும் நிலை உருவாக்கப்படும். கப்பல் பழுது பார்க்கும் தளம் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்திற்கும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவேன். 

மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும். திருச்செந்தூர் முருகன் கோவிலில்,திருப்பதி வெங்கடசலபதி கோவில் போல் அமைப்பு ஏற்படுத்தி தன்னாட்சி அமைப்பாக மாற்றி கல்வியை மேம்படுத்தப்படும். இவ்வாறு பல்வேறு அறிவிப்புகள் அதில் கூறப்படுகிறது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் முரளி யாதவ் பாஜக  நிர் வாகிகள் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆகியோர் உடன் இருந்தனர்

Check Also

இன்றைய (11.06.2019) நாள் உங்களுக்கு எப்படி?

2019 ஜுன் 11ஆம் திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.