Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மே 20 ம் தேதி புகைப்பட கண்காட்சி தொடங்கியது.எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்து புகைப்பட கண்காட்சியை ரசித்தனர். வீடியோ காட்சி

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மே 20 ம் தேதி புகைப்பட கண்காட்சி தொடங்கியது.எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்து புகைப்பட  கண்காட்சியை ரசித்தனர்.வீடியோ காட்சி
பாரத ரத்னா கழக நிறுவனர் மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது புகைப்பட கண்காட்சி தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குழு சார்பில் பாரத ரத்னா கழக நிறுவனர், மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மரக்கன்று நடுதல் அன்னதானம் கழக கொடியேற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நூற்றாண்டு குழு சார்பில் தூத்துக்குடி சிவன் கோவில் தெரு மாநகராட்சி கல்யாண மண்டபத்தில் அவரது புகைப்பட கண்காட்சியை இன்று ஆசிரியர் குப்புசாமி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தமிழக சுற்றுலாத்துறை முன்னாள் இணை இயக்குநரும், நெல்லை, தூத்துக்குடி ஒருங்கிணைந்த எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் பொருளாளர் எஸ்.எஸ்.மணி, நெல்லை, தூத்துக்குடி ஒருங்கிணைந்த எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தமிழக கதர் வாரிய முன்னாள் உறுப்பினருமான மு.பாலகிருஷ்ணன், தமிழக மீன்வளச்சி கழக முன்னாள் வாரியத் தலைவர் இரா.அமிர்தகணேசன், தொழிலதிபர் ஆத்தூர் பிருந்தாவன் மணி உட்பட பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். திருச்செந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலை வகித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குழு தலைவரும் தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ரத்தினம், எம்ஜிஆர் மன்ற பொருளாளர் எஸ்.மோகன், ஏ.பழனி, இலக்கிய அணி நடராஜன், சத்யா லெட்சுமணன், எஸ்.சாமுவேல், முன்னாள் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ஜே.மணி, இளநிலை பொறியாளர் பால்ராஜ், 28வது வார்டு வட்டசெயலாளர் ரமேஸ்கண்ணன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் ஜே.ஆசைத்தம்பி, தலைமைச்செய்தி செய்தியாளர் எம்.ஆத்திமுத்து, டிடிபிஎஸ் ஏ.வின்சென்ட் உட்பட பலர் செய்து வருகின்றனர்.

Check Also

எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..?

அஜித்குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் மகளை காப்பாற்ற போராடும் பாசமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.