Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடியில் ஜெயலலிதா 71 வது பிறந்தநாளையொட்டி 30 லட்சம் மதிப்பீல் 6429 பேருக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகளை கழக மாநில அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார். தூத்துக்குடியில் நலத்திட்ட உதவி கூட்டம் மாநாடாக காட்சியளித்தது

தமிழகமே வியக்கும் வண்ணம் ஜெயலலிதா 71 வது பிறந்த நாளையொட்டி கழக மாநில அமைப்பு செயலாளர் சி..செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடியில் வெகு சிறப்பாக ஜெ. பிறந்த நாளை கொண்டாட பல கட்டமாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி மாவட்டம் முழுவது ஜெ. பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாட ஆலோசனை கூட்டம் நடத்தி அந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் கழகக்கொடியேற்றி ஒலி பெருக்கி அமைத்து கழக பாடல்கள் ஒலிக்க செய்யவேண்டும் மற்றும் இனிப்புகள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவேண்டும் இதற்காக கழக தொண்டர்களுக்கு என் சார்பில் அணைத்து உதவிகளும் செய்ய தயார் என்று தெரிவித்தார் இதனால் கழக தொண்டர்கள் உற்சாகமாக பிறந்த நிகழ்ச்சியை மாவட்டம் முழுவதும் கொண்டாடினார்கள். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடத்தி அதில் 2oo அணிகள் பங்கேற்கசெய்து மூன்று தினங்கள் நடத்தி அதில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீ ராங்கனை களுக்கு அதிகமான பரிசு தொகைகள் உட்பட ஜெ நினைவு பரிசு கோப்பை வழங்கினார். சி .த செல்லப்பாண்டியன் சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் கபாடி போட்டியை நடத்தி ஜெ. பிறந்த நாளை தமிழகமே வியக்கும் வண்ணம் அசத்திகாட்டினார் . இதனை பார்த்து திமுக எம் எல் ஏ அனிதா   ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1 ல் கபாடி போட்டி நடத்துவதாக அனிதாராதாகிருஷ்ணன் அறிவிக்கும் வகையில் ஜெ பிறந்தநாளை அசத்தி காட்டியுள்ளார் சி .த செல்லப்பாண்டியன்.24/02/2019 அன்று அரசு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிந்து நிகழ்ச்சியை துவக்கிய சி .த செல்லப்பாண்டியன் அன்று காலையில் துவக்கிய நிகழ்ச்சி இரவு வரை மாநகர பகுதில் தொடர்சியாக நடைபெற்றது மறுதினம் கழுகுமலை உட்பட பல பகுதிகளில் ஜெயலலிதா 71 வது பிறந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாவட்டம் முழுவதும் உற்சாகமாக ஜெ பிறந்த நாள் விழா கொண்டாடபட்டது. தொடர்சியாக கொண்டாட பட்டு வரும் நிலையில் 02/03/2019 அன்று

தமிழகமே வியக்கும் வண்ணம்

 இலவச சேலை, வேட்டி, சைக்கிள், தையல் மிஷின், மீன் பாத்திரம், சில்வர் குடம், மற்றும் மாற்றுத்திறனாளிகள் சைக்கிள்  என 6429 பேருக்கு 30 லட்சம் மதிப்பீல் மாபெரும்  நலத்திட்ட உதவிகளை கழக மாநில அமைப்பு செயலாளர் சி..செல்லப்பாண்டியன் வழங்கினார்.

ஜெயலலிதா 71வது பிறந்தநாளையொட்டி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் கழக மாநில அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சேவியர், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்சி, மாரியப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் முருகன் வரவேற்புரையாற்றினார். அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில்  இணை ஓருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்லவம் ஆணைங்கிணங்க நடைபெறுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்கு தங்கம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக், சைக்கிள், மடிக்கணினி, கர்ப்பினி பெண்களுக்கு 18 ஆயிரம், மிக்சி, கிரைண்டர், போன்ற சாதனை திட்டங்களை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகின்றார். தமிழர் திருநாளுக்கு எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கிய முதல்வர் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ 2000 வழங்கி எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தில் வருவதை போல் மக்களின் வரிப்பணத்தை மக்களுக்கே வழங்கி வருகிறார். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சாதனைகளையும் அவரின் திட்டங்களையும் யாரும் இனி செய்து விட முடியாது. இந்த ஆட்சியில் தூத்துக்குடி பல்வேறு வளர்ச்சிகள் பெற்றுள்ளன. எப்போதும் அதிமுகவிற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றார். அதன் பின் 30 லட்சம் மதிப்பீல் 4,071 பேருக்கு சேலை, 2071 பேருக்கு வேஷ்டி, 71 தையல் மிஷின், 71 சைக்கிள், பெரியமீன் பானை 71, சில்வர் குடம் 71, 3சக்கர சைக்கிள் 6429 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

      நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அமலிராஜன், மாவட்ட அணி செயலாளர்கள் வக்கீல் சேகர், குருத்தாய், ராஜா, பிச்சையா, டார்சன், செல்லத்துரை,  சாலமோன்ஜெயசீலன், விஜயகுமார், ஓன்றிய செயலாளர் முருங்கை மகாராஜன், முன்னாள் மத்திய மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பேரூராட்சி செயலாளர்கள் செல்லத்துரை, மகேந்திரன், அரசகுரு, சிவலிங்கம், செந்தில்ராஜ்குமார், மாதவசிங், ஆத்திபழம், செல்லத்துரை, வக்கீல்கள் ஆண்ட்ரூமணி, பிள்ளைவிநாயாகம், ராஜாராம், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சங்கரேஸ்வரி, துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குநர்கள் சந்தனம், சுப்பிரமணி, வேல்முருகன், அன்புலிங்கம், முன்னாள் தொகுதி இணைச்செயலாளர்கள் ஞாயம் ரோமால்ட், ராஜாநேரு மீனவரனி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், ஒன்றிய அமைப்புசாரா அணி செயலாளர் பழனிச்சாமி பாண்டியன், ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜெபசிங், துணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர்கள் சுந்தர்ராஜன், அருணாச்சலம், ஜெ பேரவை பாலசுப்பிரமணியன், தலைமை பேச்சாளர்கள் முருகானந்தம், ராஜசேகர், லில்லிராஜ், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் மைதீன் , துணைச்செயலாளர் அசன், முன்னாள் கவுன்சிலர்கள் செல்லப்பா, பொன்ராஜ், லதா, ஈஸ்வரன், லிங்கராஜ்,ஆத்திக்கண், டேவிட்ஏசுவடியான சகாயராஜ், சாந்தகுருசால், ஜெயக்குமார், மாநகர வார்டு செயலாளர்கள் முருகன், கெய்னஸ், விஜயன், அன்புலிங்கம், திருமணி, முருகேசன், ரெங்கன், ராஜன், முருகன், சுயம்பு, சகாயராஜ், சிக்ஸ்ன், கருப்பசாமி, ஜெய்கணேஷ், மோகன், பூக்கடைவேலு, திருமணி, மனோகர், தமிழரசன், அந்தோணிராஜ், மாரியப்பன், ரவீந்திரன், அருள்ராஜ், ஜெகதீசன், மாடசாமி, சீனிவாசன், ஜெயகோபி, பாண்டி, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு இணை செயலாளர் சங்கர், கழக அமைப்பு செயலாளர் சி,த செல்லப்பாண்டியன் உதவியாளரும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி மூர்த்தி, தொழிநுட்ப பிரிவு  கவுதம்

 போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் சுபான், வேல்பாண்டி, , டெரன்ஸ், சண்முகராஜ், கருப்பசாமி, மீனாட்சிசுந்தரம், அந்தோணி, ராஜேந்திரன், பேச்சியப்பன், வார்டு பிரதிநிதிகள் ,துரைசிங், ராஜ்குமார், சங்கர்,  நவ்சாத், கோயில்மணி, மணிகண்டன், தாமஸ், அருண்குமார், பேச்சிமுத்து, அசரியான், வசந்தா, சகாயமேரி, எம்.ஜி.ஆர் தங்கம், மாணிக்கம், இஸ்மாயில், அந்தோணிசேவியர், நட்டார்முத்து, இசக்கிமுத்து, ராஜா, சண்முகராஜ், சுப்புராஜ், பூரண சந்திரன், காசிராஜன், வள்ளிநாயகி, உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் பெருமாள் நன்றியுரையாற்றினார்.

Check Also

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.