Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தேமுதிக கட்சியினர்: விஜயகாந்த் மனைவி பிரேமலதா மைத்துனர் சுதீஷ் உட்பட தேமுதிகவினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு.      பிரேமலதா,சுதீஷ் ஆகியோரை  கைது செய்ய வலியுறுத்தியும் தேமுதிகவினர் கொடுத்த  பொய்புகார்களை  வாபஸ் பெற தமிழகம் முழுவதும் தீவிரமாகி வருகிறது. பத்திரிகையாளர்கள் சங்கம் போராட்டம்.

தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தேமுதிக கட்சியினர்.
விஜயகாந்த் மனைவி பிரேமலதா மைத்துனர் சுதீஷ் உட்பட தேமுதிகவினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு.      பிரேமலதா,சுதீஷ் ஆகியோரை  கைது செய்ய வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் சங்கம் போராட்டம்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் களத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக கட்சிக்காரர்களை தூண்டிவிடும் வகையில் பிரேமலதா பேசியதால் தேமுதிகவினர் செய்தியாளர்களைத் தாக்கினர். தூத்துக்குடி பத்திரிகையாளர்கள்   புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி 56-வது நாளாகத் தொடர் போராட்டம் நடத்தி வரும் அ.குமரெட்டியாபுரம் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க பிரேமலதா மற்றும் எல்.கே. சுதீஷ் நேற்று  போராட்டக் களத்திற்கு வந்தனர்.
களத்தில் மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பிய பிரேமலதா, ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களைப் பேசச் சொன்னார். பின்னர், பேசத் தொடங்கிய பிரேமலதா, தொடக்கம் முதலே மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசியதை விட தேமுதிகவிற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
“உங்களது குறைகளை மத்திய மாநில அரசுகளிடம் விஜயகாந்த் கொண்டு செல்வார். திமுக, அதிமுக தவிர்த்து ஒருமுறை தேமுதிகவிற்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். விவசாயிகளின் நன்மைக்காக இதைச் செய்யுங்கள்” என்று பேசினார்.
“எந்த மீடியாவும் ஸ்டெர்லைட் போராட்டத்தைக் காட்டவில்லை” எனக் கூட்டத்தில் ஒருவர் சொல்ல, அதற்கு பிரேமலதா, ” இந்தப் போராட்டத்தை தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பி வருவது எங்களது எங்கள் டி.வி.மட்டுமே. ” என 4 முறை திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். தங்களது தொலைக்காட்சியின்  உள்ளூர்  டி.வி. செய்தியாளரையும் அழைத்து அறிமுகப்படுத்தியுள்ளார்.
முதல் 3 முறை வேறெந்த ஊடகங்களும் போராட்டத்தை ஒளிபரப்பவில்லை என்று சொன்னபோது, வழக்கமான அவதூறு என அமைதியாக இருந்த பத்திரிகையாளர்கள், 4வது முறை, “நான் இங்கு வந்ததால்தான் மீடியாக்கள் இங்கு வந்திருக்கிறார்கள்” என சொன்னபோது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூட்டத்தைப் புறக்கணித்து அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
அப்போது பத்திரிகையாளர்களைப் பார்த்து, பெண் நிர்வாகிகள் உட்பட தேமுதிகவினர் திட்டியுள்ளனர். அப்போது பத்திரிகையாளர்களுக்கும் தேமுதிகவினருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், தொலைக்காட்சி நிருபர்கள் பிரபாகர், சரவணபெருமாள்  உட்பட  3 பேரை தொண்டர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் சிப்காட் காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் ஹரிஹரனிடம்  புகார் அளிக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய புகாரின் பேரில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஆறுமுகநயினார், ஜெயராமன், மாவட்ட மகளிரணி பொருளாளர் அங்கயற்கண்ணி, ஜெயராமன் உள்ளிட்ட மேலும் பத்து பேர் மீது 147,148,294B, 323 மற்றும் 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் தேமுதிக மகளிர் அணியை சார்ந்த ஒருவர் தன்னை செய்தியாளர்கள் தாக்கியதாக புகார் கொடுத்ததால் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு எற்பட்டுள்ளது.இது குறித்து தலைமைச் செயலக அனைத்துபத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் க .குமார் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கொண்டார் இது போல் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகையாளர்கள் அமைப்பு போராட்ட களத்தில் குதித்துள்ளனர். தூத்துக்குடி செய்தியாளர்களை தாக்கிய தேமுதிக கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பிரேமலதா,சுதீஷ் ஆகியோரை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பத்திரிகையாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
யும் தேமுதிகவினர் கொடுத்த  பொய்புகார்களை  வாபஸ் பெற தமிழகம் முழுவதும் தீவிரமாகி வருகிறது.

Check Also

எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..?

அஜித்குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் மகளை காப்பாற்ற போராடும் பாசமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.