Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா 50வது நினைவு நாள் :, அதிமுக, திமுக, அமமுக கட்சிகள் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

அவரது பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள  நினைவு இல்லத்தில் அண்ணாவின் சிலைக்கு, பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவியும், மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, பொன்னையன், அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அண்ணாவின் 50-வது நினைவுதினத்தையொட்டி அதிமுக சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக சார்பில் –

தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடந்தது.  இதன்பின்னர் தி.மு.க. சார்பில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க.வின் மூத்த தலைவர் துரைமுருகன், முன்னாள் மந்திரிகள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, தயாநிதி மாறன் மற்றும் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது போல் அண்ணா நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக ,திமுக அமமுக கட்சிகள் மரியாதை செலுத்தினார்கள்

அதிமுக சார்பில் 

தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க சார்பில்  முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான சி.த.செல்லபாண்டியன் தலைமையில் மாலை அணிக்கப்பட்டது. இதில் ஆவின் சேர்மன் என்.சின்னத்துரை, மேற்கு பகுதி செயலாளர் முருகன், தெற்கு பகுதி செயலாளர் பி.என்.ராமகிருஷ்ணன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர்.ராஜகோபால், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ் குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் யு.எஸ்.சேகர், தலைமை கழக பேச்சாளர் அனல்ராஜசேகர், முருகானந்தம் வட்ட செயலாளர் ஜெய்கணேஷ், முருகன் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சங்கர்  மாவட்ட செயலாளர் உதவியாளரும் வட்டபிரதியுமான   பி.மூர்த்தி   சி. த ஜெபசிங், கவுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில்

அண்ணாவின் 50வது நினைவு நாளையொட்டி தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பி.கீதாஜீவன் எம்எல்ஏ., தலைமையில் பழைய பேருந்து நிலையம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, காய்கனி மார்க்கெட் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, காய்கனி மார்க்கெட் எதிரே உள்ள பேரறிஞர் அண்ணா திருஉருவச்சிலை முன்பு நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர அவைத் தலைவர் ஆறுமுகம், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, பாலகுருசாமி, சுரேஷ்குமார், ஜெயசிங், ரவீந்திரன், கலைசெல்வி, பாலசுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள் பொன்ராஜ், கதிரேசன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், வக்கீல் ரூபராஜா சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் உதவியாளர் ஆல்பர்ட்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில்

தூத்துக்குடி பழைய மாநகராட்சியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் மாவட்ட பொருளாளர் பிரைட்டர் தலைமையில் பகுதி செயலாளர் எட்வின் பாண்டியன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ரமேஷ் கிருஷ்ணன், நிர்வாகிகள் மாநகராட்சி சுடலைமுத்து, தங்க மாரியப்பன், சசி, இன்னாச்சி, ஆனந்த், விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Check Also

தூத்துக்குடியில் ஜெ. பிறந்தநாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.