Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி. த .செல்லப்பாண்டியன் இன்று 08/02/2019 தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை கழகத்தில் விருப்ப மனுக்களை வழங்கினார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 40 தொகுதிகளில் 37 இடங்களை வென்றது. பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. தி.மு.க. கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. தற்போது ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க. புதிய தலைமையுடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. தி.மு.க.விலும் கருணாநிதி மறைவுக்கு பிறகு, மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. களம் காண உள்ளது. இரு கட்சிகளுமே தங்களின் பலத்தை காட்ட வேண்டிய முக்கிய தருணத்தில் இருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பு கட்டத்தை எட்டியிருக்கிறது.

கூட்டணி விஷயத்தில், தி.மு.க. தனது அணியை கிட்டத்தட்ட அமைத்து விட்டது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. சார்பில் குழுவும் அமைக்கப்பட்டு விட்டது. தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிரதான கட்சியான அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் ஏற்கனவே குழு அமைத்துள்ளது. ஆனால் இதுவரையில் அ.தி.மு.க. கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக எந்த கட்சியும் இணையவில்லை. பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் கூட்டணிக்கான ரகசிய பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. நடத்தி வருகிறது.

அதே நேரத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை அக்கட்சி தலைமை அலுவலகத்தில் 10-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.


தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி. த .செல்லப்பாண்டியன் இன்று 08/02/2019 தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை கழகத்தில் விருப்ப மனுக்களை வழங்கினார்

இந்நிலையில் தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி. த .செல்லப்பாண்டியன் இன்று 08/02/2019  அதிமுக தலைமை கழகத்தில் மகாலிங்கம் அவர்களிடம் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட.. விருப்ப மனுக்களை வழங்கினார். மாவட்ட செயலாளர் சி.த .செல்லப்பாண்டியன் அவர்களுடன் கழக அமைப்பு செயலாளரும் மாநில இளைஞர் இளம்பெண் பாசறை துணை செயலாளர் நெல்லை தூத்துக்குடி ஆவின் சேர்மன் என் .சின்னத்துரை முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ஆர் ராஜகோபால், மாவட்ட செயலாளர் உதவியாளரும் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி பி .மூர்த்தி, அரசகுரு உட்பட தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.