Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடி எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் சார்பில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குழுவினர் அமைத்த எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ பார்வையிட்டு விழாக்குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். வீடியாே காட்சி……

பாரத ரத்னா கழக நிறுவனர் மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குழு சார்பில் பாரத ரத்னா கழக நிறுவனர், மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மரக்கன்று நடுதல் அன்னதானம் கழக கொடியேற்றுதல் எம்.ஜி.ஆர் பாடல்கள் மட்டும் பாடிய இன்னிசை கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நூற்றாண்டு குழு சார்பில் தூத்துக்குடி சிவன் கோவில் தெரு மாநகராட்சி கல்யாண மண்டபத்தில் அவரது புகைப்பட கண்காட்சியை நேற்று ஆசிரியர் குப்புசாமி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தமிழக சுற்றுலாத்துறை முன்னாள் இணை இயக்குநரும், நெல்லை, தூத்துக்குடி ஒருங்கிணைந்த எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் பொருளாளர் எஸ்.எஸ்.மணி, நெல்லை, தூத்துக்குடி ஒருங்கிணைந்த எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தமிழக கதர் வாரிய முன்னாள் உறுப்பினருமான மு.பாலகிருஷ்ணன், தமிழக மீன்வளச்சி கழக முன்னாள் வாரியத் தலைவர் இரா.அமிர்தகணேசன், தொழிலதிபர் ஆத்தூர் பிருந்தாவன் மணி உட்பட பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். திருச்செந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலை வகித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குழு தலைவரும் தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ரத்தினம், எம்ஜிஆர் மன்ற பொருளாளர் எஸ்.மோகன், ஏ.பழனி, இலக்கிய அணி நடராஜன், சத்யா லெட்சுமணன், எஸ்.சாமுவேல், முன்னாள் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ஜே.மணி, இளநிலை பொறியாளர் பால்ராஜ், 28வது வார்டு வட்டசெயலாளர் ரமேஸ்கண்ணன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் ஜே.ஆசைத்தம்பி, தலைமைச்செய்தி செய்தியாளர் எம்.ஆத்திமுத்து, டிடிபிஎஸ் ஏ.வின்சென்ட் உட்பட பலர் செய்து வருகின்றனர்.புகைப்பட கண்காட்சியை ஒரு வாரம் நடத்த விழா குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் 2 வது நாளான இன்று

தூத்துக்குடி எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் சார்பில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குழுவினர் அமைத்த எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை முன்னாள் அமைச்சரும் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு இந்த சிறப்பான ஏற்பாடுகளை செய்த விழாக்குழுவினர்களை பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை நேற்று ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் பார்வையிட்டு. பின்பு விழாக்குழுவினரை பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தது. விழாக்குழுவினர் மற்றும் எம்.ஜி.ஆர்ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

இந்நிகழ்ச்சியில் நெல்லை தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற முன்னாள் செயலாளர் மு.பாலகிருஷ்ணன், தமிழக முன்னாள் மீன்வளர்ச்சி கழக தலைவர் இரா.அமிர்தகணேசன், தூத்துக்குடி மாநகர வடக்கு பகுதி கழக செயலாளர் பொன்ராஜ்,தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஏசாதுரை, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ஆறுமுகநயினார், அரசு வழக்கறிஞர் செல்வகுமார், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் நடராஜன், வழக்கறிஞர் செல்வகுமார், போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க லட்சுமணன், மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் முனியசாமி, மாநகர முன்னாள் மன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜெ.தனம், முபாரக்ஜான், சுடலைமணி, முன்னாள் நகர கழக தலைவர்கள் சந்திர சேகர், அந்தோணி சேவியர் மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குழுவினர் எஸ்.மோகன், வி.ரத்தினம்,எஸ்.சாமுவேல், சத்யா இலட்சுமணன், ஆசைத்தம்பி, ஏ.ராமகிருஷ்ணன், பழனி,கே.ஏ.பி.ராதா, ஆத்திமுத்து, மற்றும் அருண்ஜெபக்குமார், அசன், மைதீன், தமிழரசன்,உலகநாதபெருமாள், வெங்கடேஷ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர்கள் சகாயராஜா,சுந்தரேஸ்வரன், பரிபூரண ராஜா, மாடசாமி,பண்டாரவிளை பாஸ்கர் திருத்துவசிங் கொம்பையா முரளி குரு ரமேஷ் அருண் சங்கர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.எம்.ஜி.ஆர் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது புகைப்பட கண்காட்சியை துவக்கியது மட்டுமல்லாம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி எம்.ஜி.ஆர் புகழ் இன்னும் பல நூறு ஆண்டுகள் நிலைத்திட வேண்டும் எம்.ஜி.ஆர் சரித்திரம் இனி வரும் இளைஞர்கள் அறிந்திடும் வகையில் தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடியில் இவ்வளவு பெரிய பிரமாண்ட ஏற்பாடுகளை செய்த எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு எனது மனதார பாராட்டுகள் என முன்னாள் அமைச்சரும் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள்தெரிவித்தார்.எம்.ஜி.ஆர் நூறாவது பிறந்த நாள் விழாவில் ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சரும் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள்கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில் கழக நிறுவணத்தலைவர்எம்.ஜி.ஆர் விழாவில் சசிகலா அணி முக்கிய நிர்வாகி பங்கேற்காமல் இருந்தது எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மனவருத்தத்தை எற்படுத்தியுள்ளது.என்பது குறிப்பிடதக்கது.

Check Also

தூத்துக்குடியில் ஜெ. பிறந்தநாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.