Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடி எஸ்.டி.ஆர் பள்ளியில் எஸ்.டி.தர்மராஜ்நாடாரின் தந்தையார் சாமுவேல்நாடாரின் வெங்கலத்திலான உருவ சிலையை த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் தொழிலதிபர் சாமுவேல்நாடாரின் சிலையை த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்திருக்கிறது எஸ்.டி.ஆர் குரூப்ஸ்க்கான பள்ளி. இந்த பள்ளியில் மறைந்த தொழிலதிபர் எஸ்.டி.தர்மராஜ்நாடாரின் தந்தையார் சாமுவேல்நாடாரின் வெங்கலத்திலான உருவ சிலை திறப்பு விழா இன்று நடந்தது. த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் சிலையை திறந்து வைத்தார்.
பள்ளியின் தாளாளரும் தூத்துக்குடி மாவட்ட த.மா.க மாவட்ட தலைவருமான எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தலைமை வகித்தார்.

பின்னர் பள்ளியில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியிலும் வாசன் கலந்து கொண்டார். மாணவ, மாணவியரின் கலை நிகச்சிகள், மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.
முன்னதாக சிலையை திறந்து வைத்த வாசன், பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’எங்கள் கட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாவட்ட தலைவர் எஸ்.டி ஆர்.விஜயசீலனுடை தாத்தா சாமுவேல்நாடாரின் வெங்கல சிலையை திறந்திருக்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்துடைய பொருளாதார வளர்ச்சிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் ஆதாரமாக விளங்கியவர் தர்மராஜ்நாடார் என்பதை நான் நன்கு அறிவேன். அவருடைய தந்தையார் சாமுவேல்நாடார் இலங்கையிலே பல தொழில்கள் செய்தவர். அவர் சென்னைக்கு வந்து அங்கேயும் தொழில்களை செய்திருந்தால் அவர் பெரிய தொழிலதிபர் ஆகியிருக்கலாம். ஆனால் அவர் தன்னுடைய சொந்த கிராமத்துக்கு வந்து விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், விவசாயத்தை வளர்க்கும் வகையில், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் கொடுக்கிற வகையில் வாழ்ந்து காண்பித்தார்.

சுதந்திரம் பெற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு வகையில் படிப்படியாக முன்னேறி வருகிறது. அதேநேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் 1940 களிலேயே இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. அப்படி அன்றே அடித்தளம் அமைத்த பெரியவர்களில் இந்த சாமுவேல்நாடாரும் ஒருவர்.

அவரது பேரன்களான எஸ்.டி.ஆர்.விஜயசீலன், எஸ்.டி.ஆர்.பொன்சீலன், எஸ்.டி.ஆர். சியாம் ஆகியோர் இணைந்து தங்களது கல்வி நிலயத்தில் சிலை நிறுவியிருக்கிறார்கள். இது அவரின் நேர்மைக்கும் உழைப்புக்கும் இவர்களின் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கும் உதவும். அது ஞாபகார்த்தமான அடித்தளமான வகையில் இந்த சிலை அமைந்திருக்கிறது என்பதை சொல்லிக் கொள்கிறேன். இதுபோன்ற நல்ல மனிதர்களின் சிலையை திறப்பதிலே நான் பெருமை அடைகிறேன்.’’ என்றார். மேலும் தொண்டர்களுடைய கருத்துக்களைத் தொடர்ந்து  கேட்டு வருகிறேன். மக்களுடைய மனநிலைக்கு ஏற்ப ஒத்தக் கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமையும். இரண்டு அரசுகளின்  செயல்பாடுகளைப் பொறுத்த வரையில் அதன் செயல்பாடுகள் வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும்.இன்னும் வளரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. மக்களின் உணர்வுகளை பூர்த்தி செய்து வருகிறது. ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். பட்டாசு தொழில் மிகவும் நலிந்து வருகிறது. அவர்களின் மறுவாழ்வுக்கு அரசு நல்ல செய்தி தர வேண்டும். தமிழகஅரசு பட்ஜெட்டை பொறுத்தவரையில் விவசாயம், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றிக்கு அதிக நிதி ஒதுக்கியதால் அவற்றை வரவேற்கிறேன்.. விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும். விவசாயம்,கல்வி போன்றவற்றிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறினார்.


மேலும் நிகழ்ச்சியில் அபி குரூப்ஸ் நிறுவனர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன், எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ், எஸ்.டி.ஆர் குரூப்ஸ்யை சேர்ந்தவர்கள். தூத்துக்குடி சட்ட மன்ற உறுப்பினர் கீதாஜீவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி உட்பட பல முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் போன்றோர்  கலந்து கொண்டனர் செய்தி எம். ஆத்தி முத்து      புகைப்படம் .பேச்சி முத்து


தூத்துக்குடி எஸ்.டி.ஆர் பள்ளியில் எஸ்.டி.தர்மராஜ்நாடாரின் தந்தையார் சாமுவேல்நாடாரின் வெங்கலத்திலான உருவ சிலையை த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார்.

Check Also

தூத்துக்குடியில் ஜெ. பிறந்தநாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.