Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடி கூட்டுறவு வங்கித் தேர்தலில், தலைவர் மு. .சங்கரரேஸ்வரி துணைத்தலைவர் க. சிவசுப்பிரமணியன் தேர்வு அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். மாவட்ட செயலாளர் சி த செல்லப்பாண்டியன் வாழ்த்து

தூத்துக்குடி கூட்டுறவு வங்கித் தேர்தலில், தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றுவதற்காக, ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 3-வது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தேர்தலில், ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் தனித் தனியாக போட்டியிட்டனர். பதவிகளை கைப்பற்றுவதற்காக இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதல் காரணமாக, இரண்டு முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கியில் 11 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது நடந்த பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 14–ந் தேதி வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் 61 பேர் மனுதாக்கல் செய்தனர். தொடர்ந்து நடந்த வேட்பு மனு பரிசீலனையின் போது, 32 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 29 பேர் களத்தில் இருந்தனர். வேட்பு மனு வாபஸ் பெறும் கடைசி நாளான 17–ந் தேதி 9 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். தற்போது 20 பேர் களத்தில் இருந்தனர். இதில் 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 6 இடங்களுக்கு 15 பேர் போட்டியிட்டனர். இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் குறைந்த அளவில் வந்து வாக்களித்தனர். வாக்காளர்கள் ஒவ்வொருவரும் பலத்த சோதனைக்கு பிறகு ஓட்டு போடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மொத்தம் 790 ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி இருந்தது. இது 3.37 சதவீதம் ஓட்டுக்கள் ஆகும். இந்த நிலையில் தேர்ந்த்தெடுக்கப்பட்ட 11 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மூலம்  தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றுவதற்காக ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். தரப்பினரிடையே கடும் போட்டி நிலவியது இந்நிலையில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஈ.பி.எஸ் தரப்பு செல்லபாண்டியன் அ ணியின் சார்பில் 9 இயக்குனர்களும் ஓ.பி.எஸ். தரப்பு 2 இயக்குனர்களும் உள்ள நிலையில் தூத்துக்குடி கூட்டுறவு வங்கித் தலைவர் பதவிக்கு மு .சங்கரரேஸ்வரியும் துணை தலைவர் பதவிக்கு க. சிவ சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டதாக கூட்டுறவு தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் சிவன் கோவில் முன்பு வெடி வெடித்து இனிப்புகள் வழங்கினர். இதில்

பகுதி செயலாளர்கள் முருகன், சேவியர் ,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ராஜசேகர், பெருமாள் ,ஜிவா பாண்டியன் ,வேல்முருகன், முருகானந்தம் சி. த. ஜெபசிங், ராஜசேகர், ஆரோன் முன்னாள் கவுன்சிலர் முருகேசன் அண்ணா போக்குவரத்து கழக நிர்வாகி சங்கர் உட்பட ஏராளமான அதிமுக நிரவாகிகள் கலந்து கொண்டனர்

Check Also

பழிக்குப் பழி.. பைனான்சியர் கொடூர கொலை.. பரபர பின்னணி

மதுரை: பழிக்கு பழி வாங்கவே, பைனான்சியர் ராஜாவை.. ஓட ஓட வெட்டி கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சேவல் சண்டையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.