Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடி டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூலில் பொங்கல் விழா கோலாகலம்

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது,  டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூல்.  இந்த பள்ளியில் நடந்த பொங்கல் விழாவுக்கு, பள்ளி தாளாளர் டாக்டர் ராஜசேகர்  தலைமை வகித்தார். பெற்றோர்கள், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், பங்கேற்றனர். பின்னர் பள்ளியில் சமத்துவ பொங்கல் வைத்து, இறைவனுக்கு படைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது. மாணவ, மாணவியர் வண்ண கோலமிட்டு, கும்மியடித்து, ஆடி பாடி மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து பெற்றோர்கள், மாணவ மாணவியர் ஆகியோருக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ராஜசேகர்  மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் பொங்கல் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியை, ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியர் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர் தூத்துக்குடி டயன்ஸ் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூலில் பொங்கல் விழா கோலாகலம் ஆக இருந்தது.

Check Also

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.