Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு! ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி கோரிக்கை மனு!

தூத்துக்குடி, 25 ஜனவரி, 2018: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தியும், மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் ஆணை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றி ஆலையைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக துறைமுக செயல்பாடுகளைச் சார்ந்திருக்கின்ற நிறுவனங்களும், பணியாளர்களும்,அறிவித்திருக்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால்தூத்துக்குடியில்  பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்களும், தொழில் / வர்த்தக நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, தூத்துக்குடி துறைமுக செயல்பாடுகளும் மற்றும் அதனை நம்பி இயங்கி வந்த பல்வேறு நிறுவனங்களும், பணியாளர்களும் தங்கள வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர்.  இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தின் சரக்குகளை கையாளுகின்ற அளவும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வெகுவாக குறைந்திருக்கிறது. 

இந்த ஆலையின் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் வருடத்திற்கு 130 சரக்கு        கப்பல்கள் மற்றும்  சுமார் 9000 கன்டெய்னர்கள் மூலமாக, ஏறக்குறைய 30லட்சம் டன் அளவிற்கு கையாளப்பட்டு வந்திருக்கிறது.  இதன்மூலம் தூத்துக்குடி துறைமுகம், அதன் சரக்கு கையாளும் இலக்கை ஆண்டுதோறும் எட்டி வந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் கப்பல் நிறுவனங்கள், கப்பல் முகவர்கள், சுங்க சரக்குகளை கையாளும் முகவர்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்கு கையாளும் நிறுவனங்கள், சரக்கு தரஆய்வு நிறுவனங்கள், எடைமேடை நிறுவனங்கள், சரக்கு கிடங்கு நிறுவனங்கள் மற்றும் இதனை சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கபட்டுள்ளன. மேலும், இந்த துறையைச்சார்ந்த  டிப்பர் லாரி மற்றும் கனரக வாகன  ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், வாகன உரிமையாளர்கள் மட்டுமின்றி வாகன பட்டறை தொழிலாளர்களும், உதிரி பாகங்கள் விற்பனையாளர்களும், பெட்ரோல் டீசல் விற்பனையாளர்களும் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2018-19 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தூத்துக்குடி துறைமுகத்தில் கையாளப்பட்ட உலர் சரக்கு விகிதம் கடந்த ஆண்டு  கையாளப்பட்ட  சரக்கு விகிதத்தை விட குறைந்துள்ளது, இதற்கு ஸ்டெர்லைட் ஆலை இயங்காததும் பிரதானகாரணமாகும். இது துறைமுகம் சார்ந்த வர்த்தகத்தில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சராசரியாக 1000 டிப்பர் லாரிகள், மாதத்திற்கு 20 க்கும் மேற்பட்ட நாட்கள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் உரிமையாளர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் மிகவும் தவிக்கிறார்கள். பல்வேறு  சரக்கு கையாளும் நிறுவனங்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நம்பி, அதிக முதலீட்டில் நிறுவிய பல சரக்கு கையாளும்  இயந்திரங்கள், தற்போது இயக்கப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதன் தாக்கத்தால் தூத்துக்குடியிலுள்ள பல சார்பு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டுள்ளன.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 3000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் மூடப்பட்டு, இன்னும் ஏராளமான நிறுவனங்கள் முடங்கியிருப்பதன் காரணமாக, தூத்துக்குடியின் பொருளாதார நிலை 25 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தவறான வதந்திகளால் தொடங்கப்பட்டஆலைக்கு எதிரான போராட்டம் இயங்கிக் கொண்டிருந்த ஆலையை மூடியது மட்டுமல்லாமல் அதனை சார்ந்த 80,000 மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தடை விதித்து 8 மாதங்கள் ஆன நிலையில்,ஆய்வு நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை மீண்டும் திறக்குமாறு ஆணை பிறப்பித்திருக்கிறது.  உச்சநீதிமன்றமும் இந்த முடிவை ஏற்று, ஆலை இயங்குவதற்கான இசைவாணையை வழங்கும் படி பரிந்துரை  செய்துள்ளது.

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.