Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடி மாநகராட்சி முத்துநகர் பூங்கா மேம்பாட்டு பணிகள் தண்ணீர் சாகச விளையாட்டுகள், இ -டாய்லெட் (கழிப்பறை) அமைச்சர் கடம்பூர் ராஜீ திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாநகர மக்களின் பொழுது போக்கு அம்சங்களை மேம்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், முத்து நகர் கடற்கரை பூங்காவில் தண்ணீர் சாகச விளையாட்டுகள் தொடர்பான உபகரணங்களுடன் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கடற்கரை சாகச விளையாட்டுகள் துவக்கப்பட்டுள்ளது.

     மேற்காணும் வசதிகள் மூலம் தூத்துக்குடி மாநகர மக்கள் அதிக பொருட்செலவில் வெளியிடங்களுக்கு சுற்றுலா சென்று வருவதற்கு மாறாக சிரமமின்றி குறைந்த செலவில் குடும்பத்துடன் குதூகலமாக பொழுதினை கழிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பிற பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வகையில் தண்ணீர் சாகச விளையாட்டுகள் அமையும் வகையில்; அனைத்து விதமான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் சாகச விளையாட்டினை  மாண்புமிகு  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள்  தலைமை ஏற்று துவக்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து                   தூத்துக்குடி மாநகரட்சிப் பகுதியில் ஸ்மார்ட்சிட்டித் திட்டத்தின் கீழ் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் 20 எண்ணம்                     இ- டாய்லெட் எனும் கழிப்பறை வசதி  செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி இ-டாய்லெட் கழிப்பறையானது முழுவதும் தானியங்கி முறையில் செயல்படுவதற்கு  தயார் செய்யப்பட்டுள்ளது.  பொது மக்கள் ஒரு நபர் கழிப்பறையினை பயன்படுத்திய பிறகு மேற்படி இ -டாய்லெட் டில் தானியங்கி முறையில் 4முறை முதல் 7முறை வரை தானாகவே   சுத்தம் செய்து கொள்ளும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்து. தற்போது முதற்கட்டமாக முத்துநகர் கடற்கரை பகுதியில்                       4 எண்ணம் இ-டாய்லெட் கழிப்பறை வசதி ரூ.24.00 லட்சம் மதிப்பீட்டில் பொது மக்கள் இலவசமாக உபயோகித்து கொள்ள  பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது,  விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் முன்னிலை வகித்தார்கள்; . மேலும் இவ்விழாவில் தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி .த செல்லப்பாண்டியன்  ஆவின் சேர்மன் சின்னதுரை, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருத்தாய் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் திராளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Check Also

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.