Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் தூத்துக்குடி கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று(28.01.2019)மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது தூத்துக்குடி திரவியபுரம் பகுதி, பொன்னகரம் பகுதி மற்றும் பூபாலராயர்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கூட்டாக மாவட்ட கலெக்டரிடம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கோரிக்கை மனு கொடுத்தனர்.

அவர்கள் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது, எங்கள் பகுதிகளை சேர்ந்த பலர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வந்தனர். தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளோம். பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பரிந்துரை செய்துள்ளதால் அதனை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை திறந்து எங்கள் வாழ்வாதாரத்தை மீட்க உதவிட வேண்டும் என கூறி இருந்தனர்.

Check Also

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.