Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

நடிகர் ராகவா லாரன்ஸ் கேரள வெள்ள பாதிப்பு மீட்பு நடவடிக்கைக்கு ரூ.1 கோடி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்?

நடிகர் ராகவா லாரன்ஸ் கேரள வெள்ள பாதிப்பு மீட்பு நடவடிக்கைக்கு ரூ.1 கோடி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகி பிறகு நடிகராகவும் இயக்குனராகவும் புகழ்பெற்றவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இப்போது காஞ்சனா 3 திரைப்பட வேலைகளில் பிசியாக உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத மழை, வெள்ளத்தினால் கேரளா மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. இழப்பை சரிசெய்ய 2500 கோடி ஆகும் என அரசு மதிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். தமிழ்த் திரையுலகில், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஜய் உள்ளிட்ட பலரும் நிதியுதவியளித்துள்ளனர். அந்த வகையில் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Check Also

அதிமுக அதிர்ச்சி.. பாமக கடுப்பு.. இனிதான் கூட்டணிக்கு இருக்குது சிக்கல்.. எல்லாம் இவரால்தான்!

சென்னை: ஒரு பேட்டி.. ஒரே ஒரு பேட்டி.. அதிமுக, பாமக என கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது என்றால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.