Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

நம் உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

வெளிநாடுகளில் எல்லாம் பூசணிக்காய்க்கு ஒரு திருவிழாவையே கொண்டாடுகிறார்கள். எந்த சுவையை சேர்த்தாலும் அதனை தன்னோடு சேர்த்துக் கொண்டு சுவையை அதிகரித்து நமக்கு காட்டக்கூடியது இது. அமெரிக்காவில் இந்த பூசணியை குறிப்பாக வெள்ளை பூசணியை நன்றி சொல்லும் விதமாக பயன்படுத்துகிறார்கள். இங்கிலாந்தில் இதனைக் கொண்டு அதிக அலங்காரங்கள் செய்கிறார்கள். ஒரு காய் அதன் வேலையையும் தாண்டி அதிகப்படியான அதாவது அலங்கரித்து வைக்க, நன்றி சொல்லும் விதமாக பயன்படுத்துவதிலிருந்தே அதன் தன்மையை நாம் அறிந்து கொள்ளலாம். நம் வீடுகளிலும் இதனை அடிக்கடி சமையலுக்கு பயன்படுத்தியிருப்போம். சமைக்கவும் மிகவும் எளிமையானதும் கூட, இதனுடைய மருத்துவ குணங்களையும், இதில் அடங்கியிருகிற சத்துக்களைப் பற்றியும் தெரிந்து கொண்டால் இதனை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்துவிடுவீர்கள்.
சத்துக்கள் :
சத்துக்கள் : வெள்ளை பூசணியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து கிடக்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமானால் விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் இ மற்றும் விட்டமின் கே, ரிபோஃபலின்,தையாமின்,விட்டமின் பி 6, ஃபோலேட்,நியாசின்,ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இதைத் தவிர கால்சியம்,மக்னீசியம்,பாஸ்பரஸ்,காப்பர் அற்றும் மக்னீசியம் ஆகியவை கிடைக்கின்றன. அதே அளவு இதில் நீர்ச்சத்தும் இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி : இதில் இடம்பெற்றிருக்கக்கூடிய ஏராளமான சத்துக்களால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் வலுப்பெறும். வைரஸ் தாக்குதல்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். வெள்ளைப் பூசணியை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்,அப்படிச் செய்து வந்தால் அது நம் உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

கண்கள் : வெள்ளைப் பூசணி கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. வெள்ளைப் பூசணியில் விட்டமின் ஏ இருப்பதுடன் லுட்டின் மற்றும் எக்சான்தின் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இது கண்களில் ஏற்படக்கூடிய காட்ராக்ட் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்கும்.
இதயம் :
இதயம் : மாரடைப்பு பக்கவதாம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் குறைக்க முடியும். இதில் இருந்து கிடைக்கக்கூடிய ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்கிற தமனிகளை வலுவாக்கும். அதில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். இதனால் ரத்த ஓட்டம் குறைவது தடுக்கப்படும். அதோடு இது நம் உடலின் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் கொண்டுவரும்.

கிட்னி : வெள்ளைப் பூசணி கிட்னிக்கு மிகவும் உகந்தது. கிட்னியின் செயல்பாடுகளுக்கு தினமும் ஒரு கிளாஸ் வெள்ளைப் பூசணி ஜூஸ் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைத்திடும். கிட்னி கற்களினால் ஏற்படுகிற வயிற்று வலியை குறைக்க உதவிடுகிறது.

பூசணி விதைகள் : சமையலுக்கு பயன்படுத்தும் போது அந்த விதைகளை அப்படியே நீக்கிவிட்டுத் தான் பயன்படுத்துவோம். ஆனால் அதிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதனை உணவுகளில் சேர்த்துக் கொள்வதால் ஆர்த்ரைட்டீஸ் வலி தவிர்க்கப்படும். அதே போல கை கால் முட்டிகள் வலுவடையவும் இதனைச் சாப்பிட வேண்டும்.மன அழுத்தம் :

மன அழுத்தம் : நவீன கால வாழ்க்கை முறையினால் ஒவ்வொரு வரும் உடற்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், இதற்கு காரணம் அவர்கள் மனதில் நிறைய நெகட்டிவான எண்ணங்கள் தோன்றுவதே, பெரும்பாலும் அதனை அவர்களது குணாதிசயம் என்று சொல்லி விட்டு விடுகிறோம் ஆனால் இதற்கும் உடலில் ஏற்படுகிற சத்துக் குறைபாட்டிற்குமே சம்பந்தம் உள்ளது. உடலில் ட்ரிப்டோபான் குறையும் போது மன அழுத்தம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு. பூசணியில் எல்-ட்ரிப்டோபான் அதிகம் இருக்கிறது.
ப்ரோஸ்டேட் புற்று நோய் :
வயதான தோற்றம் : வெள்ளைப் பூசணியில் விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் இ மற்றும் ஜிங்க் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இது ஆரோக்கியமான சருமத்திற்கு மிகவும் நல்லதாகும். இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. வெள்ளைப் பூசணியில் இருக்கக்கூடிய என்சைம்கள் மற்றும் வெள்ளை நிறத்தை அளிக்கக்கூடிய அல்ஃபா ஹைட்ராக்சி அமிலங்கள் சருமத்தினை பொலிவாக்கும் இதனால் வயதான தோற்றம் ஏற்படுவது தவிர்க்கலாம்.

எண்ணெய் சருமம் : இதில் இருக்கக்கூடிய ஃபேட்டி அமிலங்கள் மற்றும் விட்டமின் இ ஆகியவை சருமத்தில் உற்பத்தியாகிற சீபத்தை கட்டுப்படுத்தும் இதனால் அதிக எண்ணெய் சுரப்பு இருக்காது. அதோடு இது சருமத்திலிருந்து தேவையற்ற அழுக்குகளை நீக்கிடும். கரும்புள்ளி மற்றும் பருவை நீக்க வெள்ளைப் பூசணி மாஸ்க் பயன்படுத்தலாம்.முடி :

முடி : வறண்ட தலைமுடிக்கு வெள்ளைப் பூசணி உடனடி நிவாரணம் அளிக்கும். முடிக்குத் தேவையான ஈரப்பசையை வழங்குவதால் அதிக முடி உதிர்வு இருக்காது. வெள்ளைப்பூசணி பேஸ்ட்,தயிர் கலந்து தலையில் ஹேர்பேக்காக போட்டுக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் காய்ந்ததும் கழுவிவிடலாம்
குழந்தைகள் :

குழந்தைகள் : வெள்ளைப் பூசணி ஜூஸோ அல்லது சமைத்த காயோ குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டாம். ஒரு வயதிற்குட்டப்பட்ட குழந்தைகளுக்கு அஜீரணம், வயிற்று வலி, வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்திடும். அதே போல கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அளவுடன் சாப்பிட்டால் நல்லது.

Check Also

எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் பிரபல நடிகர்..?

அஜித்குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் மகளை காப்பாற்ற போராடும் பாசமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.