Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க-வில் விருப்ப மனு – விண்ணப்பங்கள் குவிந்தன!தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடஏராளமானோர் விருப்ப மனுவழங்கினார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடமிருந்து கடந்த 4-ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படுகிறது.

இதுவரை 1000 .தி.மு. உறுப்பினர்கள் தங்களது விருப்ப மனுக்களை சமர்ப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட, விருப்ப மனு அளிக்கும் நிகழ்வு கடந்த 4-ம் தேதி துவங்கியது. ராயப்பேட்டையில் இருக்கும் அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இதனை தொடங்கி வைத்தனர். முதல் நாளிலேயே இதற்கு 250 மனுக்கள் குவிந்தன.

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.25000 பணம் செலுத்தி, விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து பிப்ரவரி 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென முன்னர் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன்படி இன்று மாலை 5 மணிக்கு, இந்நிகழ்வு முடிவுக்கு வருகிறது. அதோடு, இதுவரை 1000 அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களது விருப்ப மனுக்களை சமர்ப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தூத்துக்குடி அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி. த .செல்லப்பாண்டியன் 08/02/2019  அதிமுக தலைமை கழகத்தில் மகாலிங்கம் அவர்களிடம் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட.. விருப்ப மனுக்களை வழங்கினார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜசேகர், 10/02/2018 அதிமுக தலைமை கழகத்தில் மகாலிங்கம் அவர்களிடம் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட.. விருப்ப மனுக்களை வழங்கினார் மேலும் வழக்கறிஞர்கள் முள்ளக்காடு செல்வகுமார் , ஆதித்தன் உட்ப்பட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர்  தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட.. விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் வழங்கினார்கள்.

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.