Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2 பேரை மீட்டெடுக்க காவல் துறையில் தஞ்சமடைந்த பெற்றோர்….!

தேனி : நித்யானந்தா சீடர்களின் மூளைச்சலவைக்கு மயங்கி 2 பேர் பிடதி ஆசிரமத்திற்கு சென்றுவிட்டதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பிடதி ஆசிரமத்தில் இருந்து 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதற்காக நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்கரன் என்பவர் ஜெயமங்கலம் போலீசாரிடம் அளித்த புகாரில் தன்னுடைய மகன் மனோஜ் மற்றும் பேத்தி நிவேதாவை நித்தியானந்தாவின் சீடர்கள் மூளைச்சலவை செய்ததாக தெரிவித்தார். இதில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே அறியாத இருவரும் எங்களின் பேச்சையும் மீறி நித்யானந்தாவில் பிடதி ஆசிரமத்திற்கு சென்று விட்டனர்.
நித்யானந்தா சீடர்களின் பேச்சில் மயங்கி பிடதி ஆசிரமம் சென்றவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று பாஸ்கரன் தன்னுடைய புகாரில் கூறி இருந்தார். இதனையடுத்து கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திற்கு சென்ற போலீசார் மனோஜ், நிவேதாவை மீட்டுள்ளனர். அவர்களை ஜெயமங்கலம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Check Also

தூத்துக்குடியில் ஜெ. பிறந்தநாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.