Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:

பத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:

தடை செய்ய கோரி தமிழக அரசிற்கு தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் வேண்டுகோள்

அன்புள்ள பத்திரிகை தோழர்கள் பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய விழிப்புணர்வு தகவல். சிந்தித்து செயல்படுங்கள் பத்திரிகை சொந்தங்களே, ஒன்றினைந்து அனைத்து தரப்பினர்களுக்கும் போலிகளை அடையாளம் காட்டுவோம்.

தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் அரசு பதிவு எண் பெற்று சுமார் 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் நலன் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அநீதியை துணிச்சலுடன் தட்டிக்கேட்கும் மாபெரும் சக்தியாக இந்த பத்திரிகையாளர் அமைப்பு விளங்கி வருவது அனைவரும் அறிந்ததே.

பத்திரிகையாளர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் பொழுது, முதன் முதலாக குரல் கொடுப்பதுடன் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தி பத்திரிகையாளர்கள் பிரச்சனைகள் பலவற்றிற்கு தீர்வு கண்டு வந்துள்ளது இந்த அமைப்பு.

தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் பாதுகாப்பு அரணாக செயல்படும் இந்த அமைப்பு, பத்திரிகையாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையை மத்திய மாநில அரசுகளின் தனிக்கவனத்திற்கு எடுத்துச் செல்வதிலும் இந்த அமைப்பு முன்னணியாக செயல்படுவது அனைத்து பத்திரிகையாளர்களும் அறிந்தது.

இதுபோன்ற  பல சாதனைகளை நிகழ்த்தி வரும் தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் அதனை வழிநடத்திச் செல்லும் முனைவர் க.குமார் அவர்கள் மற்றும் அவருடன் இணைந்து செயலாற்றும் முழு நேர பத்திரிகையாளர்களாக பணியாற்றும் நிர்வாகிகள் பலர் ஒத்துழைப்போடு இந்த அமைப்பு சுமார் 10 ஆண்டுகளில் தமிழக அரசு மற்றும் அரசு துறை அதிகாரிகள், ஊடகத்துறை நிறுவனர்கள், மூத்த செய்தியாளர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று சிறந்து விளங்கி வருகிறது.

பத்திரிகையாளர்களின் நலனிற்காகவே முழுநேரமும் பாடுபட்டு வரும் இந்த அமைப்பின் பெயரை பயன்படுத்தி, குறுக்கு வழியில் பிரபலமடையலாம் என்ற தீய நோக்கத்தோடு, இந்த அமைப்பின் பெயரைச் சார்ந்து ஒருசிறு மாற்றம் மட்டுமே செய்து கொண்டு 2 அமைப்புகள் தற்போது உலா வருகின்றன. இவர்களுக்கு பத்திரிகையாளர்கள் நலன் மற்றும் அவர்களின் பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகள் முழுவதும் தொpய வாய்ப்பில்லை. ஏனெனில், மேற்கண்ட நபர்கள் பத்திரிகை துறையைச் சார்ந்த நபர்களே அல்ல. இந்த அமைப்பில் கொத்தனார், செருப்புக்கடை மற்றும் பீடாக்கடை,  சுண்டல் விற்பவர், மூடை தூக்கும் தொழிலாளி, டிரைவர், ரோட்டோரம் பிளாட்பார்ம் கடை வைத்திருப்பவர்கள் என பத்திரிகை துறைக்கே சம்பந்தமில்லாத நபர்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளார்களாம். இவர்களில் பலர் கட்டப்பஞ்சாயத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் பெயரைச் சார்ந்து புற்றீசல் போல் உருவாகியுள்ள போலி பத்திரிகையாளர் அமைப்பை தடை செய்ய சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பதிவுத்துறை பதிவாளர் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு இதுகுறித்து எங்கள் அமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளோம்.

இந்த போலி அமைப்புகளில் பத்திரிகை துறையை சாராத நபர்களுக்கு மாநில நிர்வாக பொறுப்பு, மண்டல நிர்வாக பொறுப்பு, மாவட்ட நிர்வாக பொறுப்பு என ஒரு மோசடி வேலைகள் நடைபெற்று வருகிறது. எங்களது பத்திரிகையாளர் அமைப்பின் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி இந்த மோசடி வேலைகளில் ஈடுபடும் நபர்களை முழுநேர பத்திரிகையாளர்களாக விளங்கும் நம் பத்திரிகை தோழர்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறையை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு பல ஆண்டுகளாக அனைத்து தரப்பினர்களிடமும் செல்வாக்கு பெற்ற பத்திரிக்கையாளர்கள் அமைப்புச் சார்ந்தோ ஒருசில வார்த்தைகள் மாற்றம் செய்து உருவாக்கப்பட்டு உலா வரும் போலி பத்திரிகையாளர்  அமைப்பை தமிழக அரசு மற்றும் மாநில உளவு பிரிவு போலீசார் இந்த அமைப்பை நடத்தி வருபவர்களின் பின்னணி குறித்து விரிவான அறிக்கை பெறப்பட்டு போலி அமைப்புகளை பதிவுத் துறை வாயிலாக தடை செய்ய வேண்டும் என தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

முக்கிய குறிப்பு: தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கத்தில் பத்திரிகை துறையில் பணியாற்றும் நபர்கள் மட்டுமே உறுப்பினராக முடியும், அதே சமயத்தில் 2019-ல் உறுப்பினராக இணைய உள்ள பத்திரிகையாளர்கள் தாங்கள் பணியாற்றி வரும் நிறுவனத்தின் அடையாள அட்டை அல்லது அரசு சார்பில் வழங்கப்படும் பத்திரிகையாளர் அடையாள அட்டை அல்லது பத்திரிகை அலுவலகங்களில் இருந்து வழங்கப்பட்ட பணிநியமன ஆணை நகல் இருந்தால் மட்டுமே இந்த அமைப்பில் உறுப்பினராக இணைய முடியும் என்ற கொள்கையை எங்கள் அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக கடை பிடித்து வருகிறது. இதுபோன்று நமது சக பத்திரிகையாளர்கள்  அமைப்பைச் சார்ந்த தோழர்களும் இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பது எங்களது பணிவான வேண்டுகோள். வருங்காலத்தில் போலி பத்திரிகையாளர் அமைப்புகளை தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இதுபோன்ற அமைப்புகளில் உறுப்பினர்களாக சேர்ந்து தங்களது நற்பெயரை கெடுத்து விட வேண்டாம் என்ற எண்ணத்தோடு இந்த அறிவிப்பை அனைத்து பத்திரிகை தோழர்களுக்கும் தெரியப்படுத்துகிறோம்.  தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் விழிப்புடன் செயல்படுவோம், ஒன்றிணைந்து போலிகளை விரட்டுவோம்.

இவண்

மாநில தலைவர்

க.குமார்

தலைமைச் செயலக அனைத்துப் பத்திரிகையாளர்கள் சங்கம்

சென்னை.

 

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *