Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

பள்ளிப்படிப்பை முடிக்காத ‘போலி’ ஐபிஎஸ் அதிகாரி: மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சென்றபோது சிக்கினார்

-ஐ.ஏ.என்.எஸ்

பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்ட இளைஞர் ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்டு, ஐஐடி, யுபிஎஸ்சி தேர்வுகளில் எவ்வாறு தேர்ச்சி பெறுவது குறித்த வகுப்புகளை எடுக்கச் சென்றபோது போலீஸில் சிக்கினார்.

அந்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் அபே மீனா என்றும் தன்னை போலி ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்டு பல இடங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துவந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெய்ப்பூர் போலீஸ் எஸ்பி. கரண் சர்மா கூறியதாவது

அபே மீனா போலீஸார் பயன்படுத்தும் வாகனத்தில் ஜெய்ப்பூரில் வலம்வருவதை கண்காணித்தனர். அந்த வாகனத்தில் வந்த இளைஞர் அணிந்திருந்த அடையாள அட்டையில் ஆங்கிலத்தில் branch என்ற வார்த்தைக்கு பதிலாக Branche என்று குறிப்பிட்டிருந்து சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு அந்த இளைஞரை பின்தொடர்ந்தோம். ஒரு குழு அந்த இளைஞர் குறித்த விவரங்களை சேகரிக்கத் தொடங்கியது, மற்றொரு குழு அந்த இளைஞரின் சமூகவலைதளக் கணக்குகளை ஆய்வு செய்தது, மூன்றாவது, குழு அந்த இளைஞரை பின் தொடர்ந்தது.

போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் பெயர் அபே மீனா என்பது தெரியவந்தது. அவர் தனது முகநூல் பக்கத்தில் தன்னை ஐபிஎஸ் அதிகாரி எனவும், சிபிசிஐடி பிரிவில் துணை ஆணையராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.உத்தரகாண்டில் ஒரு பெண்ணுடன் அந்த அபே மீனா வாழ்ந்து வருவது தெரியவந்தது.

பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று தன்னை ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் அபே மீனா பங்கேற்று வந்துள்ளார். தான டெல்லி ஐஐடியில் பிடெக் முடித்தவர் என்று கூறி ஏமாற்றியுள்ளார். தனக்கு ஜெய்ப்பூரில் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிதுள்ளார். ஆனால், உண்மையில் பள்ளிப்படிப்பைக் கூட அவர் முடிக்கவில்லை.

விசாரணையில் ஜெய்ப்பூர் மாவட்டம் சவாய் மதோபூரில் உள்ள பிலோடா கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா என்பது தெரியவந்தது.

ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் ஐஐடி, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கச் சென்றபோது மீனாவை கடந்த வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஐபிஎஸ் சீருடை, போலி அடையாள அட்டை, வயர்லஸ் செட், மூன்று போலிதுப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்டு ஹோட்டலிலும் மீனா தங்கியுள்ளார்.  

இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால், அடுத்துவரும் நாட்களில் இவர் ஈடுபட்ட மோசடி விவரங்கள் தெரியவரும்.

இவ்வாறு எஸ்பி. தெரிவித்தார்

Check Also

காலி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்கவேண்டிய வாஸ்து விதிகள்…!

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.