Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

பழிக்குப் பழி.. பைனான்சியர் கொடூர கொலை.. பரபர பின்னணி

மதுரை: பழிக்கு பழி வாங்கவே, பைனான்சியர் ராஜாவை.. ஓட ஓட வெட்டி கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சேவல் சண்டையில் ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொடூர கொலைக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

மதுரை கே.புதூர் ராம வர்மா நகரை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 47 வயது. திமுக பிரமுகர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர்.. வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இதை தவிர, சேவல் சண்டையில் நிறைய ஆர்வம் உள்ளவர். இதனால் சுற்றுவட்டாரத்தில் ராஜா என்றால் ரொம்ப பிரபலம்.

கும்பல்

கும்பல்

இவர் நேற்று முன்தினம் இரவு ஜவகர்புரம் டாஸ்மாக் கடைக்கு சென்று, மது குடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து கொண்டது. ராஜாவை நாலாபுறமும் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

வீடியோ

வீடியோ

இதில் ராஜா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து பிணமானார். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து கே.புதூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

4 பேர் கைது

எதனால் இந்த கொலை நடந்தது என்று உடனடியாக தெரியாமல் இருந்த நிலையில், இக்கொலை தொடர்பாக மதுரை, புதூர் ராம்வர்மா நகரைச் சேர்ந்த நிஜாம்முகைதீன், கார்த்திக் (எ) குட்டை கார்த்திக், தவ்பீக், ஹரிகிருஷ்ணன் மற்றும் சிலர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது. விசாரணையில், இந்த கொலை பழிக்குப்பழியாகவே நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஸ்ரீதர்

ஸ்ரீதர்

கடந்த 2016-ம் ஆண்டு வாடிப்பட்டியில் நடந்த சேவல் சண்டையில் வாடிப்பட்டி ஸ்ரீதர் தரப்புக்கும், ராஜா தரப்புக்கும் இடையே தகராறும், வாக்குவாதமும் நடந்தது. இதில், ஸ்ரீதர் படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக ராஜா மீது குற்றம்சாட்டப்பட்டு, அந்த வழக்கும் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஸ்ரீதர் தரப்பினர் ராஜாவை பழி வாங்கி உள்ளனர். கொலையான ஸ்ரீதரின் நண்பரான கார்த்திக் (எ) குட்டை கார்த்திக் உள்ளிட்ட சிலர்தான் ராஜாவை கொன்றுள்ளனர். இதனால் விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

Check Also

பேப்பர் எங்கடா.. ஷூ காலால் மிதித்த காக்கி சட்டைகள்.. அடிக்காதீங்க சார்.. வலிக்குது.. ஷாக் வீடியோ

லக்னோ: இளைஞர் ஒருவரை 2 போலீசார்கள் எகிறி எகிறி காலால் எட்டி உதைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்தியாவில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.