Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

பாஜகவை வைத்து போட்ட திட்டம் சக்ஸஸ்.. இஸ்லாமியர்களின் வாக்குகளை அள்ளிய அதிமுக.. எப்படி?

வேலூர்: வேலூரில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக அதிமுக போட்ட திட்டம் மிக சரியாக வேலை செய்துள்ளது. அதிமுக அங்கு வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.

வேலூர் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வேலூரில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 1,051301 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார் .

5 சுற்று முடிவுகளில் அதிமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 934111 வாக்குகள் பெற்றுள்ளார்.

 என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

தற்போது அதிமுக வேலூரில் வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போதே அதிமுக 11 ஆயிரம் வாக்குகள் முன்னிலை வகிக்க தொடங்கிவிட்டது. இன்னும் 9 சுற்றுகள் இருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் முடிவுகள் மாற கூட வாய்ப்புள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

வேலூரில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் எல்லாம் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தும் கூட, அதிமுக இஸ்லாமிய வாக்குகளை அதிக அளவில் கவர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக இல்லை

பாஜக இல்லை

பாஜகவை அதிமுக பிரச்சாரம் செய்ய அழைக்காமல் இருந்ததுதான் இதற்கு காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் பாஜக தலைவர்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடையாது. பாஜக வேலூரில் பிரச்சாரம் செய்தால், அதிமுகவின் தோல்விக்கு அது காரணமாக இருக்கும் என்று கூட கூறப்பட்டது.

திட்டம்

திட்டம்

அதேபோல் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை பாஜக பாதிக்கும் என்றும் கூறப்பட்டது. இதனால் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா போன்ற யாருமே தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவில்லை. தற்போது அது தேர்தல் முடிவிலும் எதிரொலிக்க தொடங்கி உள்ளது.

வெற்றி

வெற்றி

பாஜகவை களமிறக்காமலே அதிமுக இந்த தேர்தலில் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. அதிலும் இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம் இருக்கும் வேலூரில் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.