Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

பாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..!கோபத்தின் உச்சாணியில் பிஜேபி..!!

பிரதமர் மோடி பாரத் மாதா கீ ஜே என்று கூறிக் கொண்டு அனில் அம்பானிக்கு வேலை பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாடி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பேசிய அவர் நாட்டு மக்களிடம் இருந்து ரூபாய் 30 ஆயிரம் கோடியை திருடி அதை பிரதமர் மோடி அனில் அம்பானியிடம் கொடுத்து விட்டதாகக் பகீரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் தன் உரையைத் தொடங்குவதற்கு முன்னதாக பாரத் மாதா கீ ஜே என மோடி கூறுகிறார் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, பாரத மாதாவைப் போற்றுபவரால் எப்படி விவசாயிகளை மறந்திருக்க முடியும் என்று சாடினார்.
மேலும் மோடி பாரத் மாதா கீ ஜே என்று கூறுவதற்கு பதிலாக அனில் அம்பானி கீ ஜே, மெகுல் சோக்சி கீ ஜே மற்றும் நீரவ் மோடி கீ ஜே, லலித் மோடி கீ ஜே என்று தானே  குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று ராகுல் காரசார விமர்சனமாக சாடினார்.

Check Also

தூத்துக்குடியில் ஜெ. பிறந்தநாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.