Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர் . முரளி ரம்பாதலைமையில் ஒரு நாள் பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு இன்று (28.01.2019) சமூக பாதுகாப்புத்துறையின் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் அலகு சார்பில் இளைஞர் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப அவர்கள் தலைமையில் ஒரு நாள் பயிற்சி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இப்பயிற்சிக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலிருந்து சார்பு ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை துவக்கி வைத்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப அவர்கள் இளைஞர் நீதிச்சட்டத்தை பற்றியும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும் தெளிவாக விளக்கினார்கள். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஜேம்ஸ் அதிசயராஜா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். வழக்கறிஞர் ரூபன் கிஷோர் இளைஞர் நீதி சட்டம் 2015ல் கூறப்பட்டுள்ள ஷரத்துக்கள் பற்றி விளக்கி கூறினார். வழக்கறிஞர் சுபாஷினி பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012ல் கூறப்பட்டுள்ளவை பற்றி விளக்கி கூறினார். மன நல மருத்துவர் சிவசைலம் அவர்கள் குழந்தைகள் மன நிலை குறித்து விளக்கி பேசினார். இளைஞர் நீதிக்குழு நடைமுறைகள் குறித்து நன்னடத்தை அலுவலர் பால் இக்னேஷியஸ் பயிற்சி அளித்தார். குழந்தைகளை கையாளும் விதம் குறித்து ஜான் மோசஸ் கிரிதரன் அவர்கள் எடுத்துரைத்தார். இப்பயிற்சியின் போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன்ராமு மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Check Also

ரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்!

சென்னை: நாம் தமிழர் கட்சியினருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் இடையில் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக சண்டை நடந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.