Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

புதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. தமிழக பாஜக படுகுஷி!

சென்னை: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை தமிழக பாஜக பாட்டு பாடி வரவேற்றுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தானது 1949-ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த போது கொடுக்கப்பட்டது. இந்த சிறப்பு அந்தஸ்தை இன்று மத்திய அமைச்சரவை ஒன்று கூடி முடிவு செய்து ரத்து செய்துவிட்டது.

TN BJP welcomes Jammu and Kashmir bifurcation

இதை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் ஜம்மு- காஷ்மீர் இந்தியாவுடன் இணைகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் செயலை தமிழக பாஜக பாராட்டியுள்ளது. இதுகுறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் நேருவின் வரலாற்று பிழையை சரி செய்து, காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் இணைத்துள்ளார் மாண்புமிகு @AmitShah

#NehruBlunder

#Article370

“புதிய வானம் புதிய பூமி

எங்கும் பனிமழை பொழிகிறது

நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப் பூமழை பொழிகிறது” என தெரிவித்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tn-bjp-welcomes-jammu-and-kashmir-bifurcation-359204.html

Check Also

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.