Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

பெண் பத்திரிகையாளரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த கோமாளி நடிகர் எஸ்.வி.சேகரை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தலைமைச் செயலக அனைத்து பத்திரிகை யாளர்கள் சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்டும் அனைத்து பத்திரிகையாளர்கள் குடும்பம் பற்றி தவறாக விமர்சனம் செய்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க முன்வராமல் காவல்துறை மெளனம் காத்துவருவதை கண்டித்தும் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,

பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகரை கண்டித்தும் நேற்று தலைமைச் செயலகம் அனைத்து பத்திரிகை யாளர்கள் சங்கத்தின் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் க.குமார் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்த உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் சகாயராஜ் ,தமிழ்நாடு நிருபர்கள் சங்கம் தலைவர் தமிழ்பித்தன் ,அகில இந்திய ஜனநாயக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் கருணாகரன் தமிழ்நாடு பிரஸ் மீடியா ரிப்போர்ட்டர் யூனியன் பொதுச்செயலாளர் ஆகியோர் கண்டன பேரூரையாற்றினார்கள் அவர்களை தொடர்ந்து மக்கள் சட்ட உரிமை கழகம் அவைத்தலைவர் பி.பாலசுப்பிரமணியம் காந்தி மக்கள் கட்சி நிறுவனர் ஜிபிஎஸ். கார்த்திக் ஆகியோரும் கண்டன உரையாற்றினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் பலரும் பேசியதாவது .

பத்திரிகையாளர்கள் மனது புண்படும் வகையில் கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல்துறை மூலம் 4 பிரிவுகளில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் இன்று வரை காவல்துறையால் அவர் கைது செய்யப்படாமல் இருக்கிறார் .

எஸ்.வி.சேகர் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,

மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் .

இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராம திலகம், எஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார் நீதியரசர் உத்தரவை அமுல்படுத்த வேண்டிய தமிழக அரசு ,தமிழக காவல்துறை,தமிழக உள்துறை எஸ்.வி.சேகர் விசயத்தில் மெளனம் காத்து வருவதன் பின்னணி என்ன? என்பது குறித்தும் ஏழை பாமரனுக்கு ஒரு நீதி ,செல்வாக்கு படைத்தவருக்கு ஒரு நீதியா ? நீதிமன்றம் உத்திரவை மதிக்காமல் தமிழக காவல்துறை ஏன் மெத்தன போக்கை காட்டுகிறது . இது போன்ற கிரிமினல் வழக்கு பிரிவில் கீழ் பொதுமக்களில் ஒருவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துயிருந்தால் அந்த நபருக்கும் இதே கருணையை காட்டியிருப்பார்களா காவல்துறையினர்? எஸ்.வி சேகர் மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டுயிருப்பது பத்திரிகையாளர்களுக்கு வேதனையளிக்கிறது.

வழககில் ஜாமீன் பெறாமல் பொது நிகழ்ச்சி ஒன்றில் துணிச்சலாக எஸ்.வி.சேகர் கலந்து கொள்கிறார் என்றால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என தமிழக மக்கள் மத்தியில் விவாதம் நடைபெறுகிறது.

ஒரு தலைபட்சமாக நடைபெறும் இந்த செயல் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது.இந்தியாவில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்பது தான் உண்மை ஆனால் இது தற்போது காற்றில் பறக்கவிட்ட கதையாகி விட்டது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்ந்து தமிழக உள்துறை,தமிழக காவல்துறை பாரபட்சமின்றி எஸ்.வி சேகரை உடனடியாக கைது செய்து ஜனநாயக மரபை காப்பாற்ற வலியுறுத்தி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தங்களது கண்டன பதிவுகளை பதிவுயிட்டனர்.

பத்திரிகையாளர்களுக்காகவும் அவர்களின் உரிமைகாக்கவும் எந்த நேரத்திலும் குரல் கொடுத்து வரும் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டைரக்டர் கெளதமன், மற்றும் பல்வேறு பத்திரிகையாளர்கள் அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் தலைமைச் செயலகம் அனைத்து பத்திரிகையாளர்கள்சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் ,மாவட்ட நிர்வாகிகள் கடலூர் மகே.செல்வமணி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் போலீஸ் குவிக்கப்பட்டனர்.

Check Also

தூத்துக்குடியில் ஜெ. பிறந்தநாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த .செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்71 பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி .த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.