Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.05 ஆக விற்பனை

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டு வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையில் இருந்து 0.09 பைசாக்கள் உயர்ந்து ரூ. 80.05க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 0.06 பைசாக்கள் உயர்ந்து ரூ. 72.35க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை ரூ.80ஐ மீண்டும் தொட்டுள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ. 79.96க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ. 72.29க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Check Also

17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.!!

சென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *